தேர்தலில் வெல்ல முடியாதவர்கள் அவதூறு மூலம் திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள் - கே.என். நேரு பதில்

மக்களை நேரில் சந்தித்து தேர்தலில் வெல்ல முடியாதவர்கள் அவதூறு மூலம் திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கூறியுள்ளார்.

தேர்தலில் வெல்ல முடியாதவர்கள் அவதூறு மூலம் திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள் - கே.என். நேரு பதில்
கே.என். நேரு.
  • Share this:
சமூக ஊடகங்களில் பக்தர்கள் மனம் புண்படும்படி வெளியான இணைய காட்சிக்குப் பின்னணியில் திமுக இருப்பதைப் போல் தவறான தகவல் பரப்பப்படுவதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மத்தியில் திமுகவிற்கு உள்ள செல்வாக்கை பார்த்து கட்சியின் மீது களங்கம் கற்பிக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மக்களை நேரில் சந்தித்து தேர்தலில் வெல்ல முடியாதவர்கள் அவதூறு மூலம் திமுகவை வீழ்த்த நினைப்பதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.

சமீப காலமாக இணையதளத்தில் வரும் விமர்சனங்கள் எல்லாவற்றிலும் திமுகவையும் சேர்த்துக் கோர்த்து விடும் போக்கை ஓர் உத்தியாகச் சிலர் திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் மனம் புண்படும்படி வெளியான இணைய காட்சிக்கு பின்னணியில் திமுக இருப்பதுபோல் சில அரசியல் அரைகுறைகள் பரப்பி வருகின்றனர்.


Also read: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு

யாருடைய மனதைப் புண்படுத்துபவர்களோ, யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்களோ திமுகவினர் அல்லர் என்றும் இத்தகைய அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பும் தீயசக்திகளை இணையதளங்களில் இயங்கும் தி.மு.க. தோழர்கள் அடையாளம் கண்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்றும் நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா பரவலை முன்கூட்டியே தடுக்க முடியாத மத்திய, மாநில அரசுகள் மக்கள் கோபம் பாயக் கூடாது என்பதற்காக திசை திருப்பும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கே.என்.நேரு குற்றச்சாட்டியுள்ளார்.இந்த தந்திர அரசியலை உணர்ந்து திமுகவினர் கருத்துச் சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்தால் இவர்கள் அனைவரும் காணாமல் போய்விடுவார்கள் என்றும் கே.என். நேரு கூறியுள்ளார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading