ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னைக்கு வருவோர் செங்கல்பட்டு பாலாற்று பாலத்தில் வர வேண்டாம்...! மாற்றுபாதை இதோ...

சென்னைக்கு வருவோர் செங்கல்பட்டு பாலாற்று பாலத்தில் வர வேண்டாம்...! மாற்றுபாதை இதோ...

செங்கல்பட்டு பாலம்

செங்கல்பட்டு பாலம்

Palaru Bridge: கடந்த வாரம் இந்த பாலத்தில் நெரிசல் ஏற்பட்டதால், பல மணிநேரம் வாகனங்கள் நகரமுடியாமல் தவித்தன. இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக பயணிகள் மாற்றுபாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மாமண்டூர் பாலாற்று மேம்பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பாலாற்றில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 50 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் கடந்த 7ம் தேதி முதல் சீரமைக்கும் பணி தொடங்கியது. 20 நாள் நடைபெறும் இந்த சீரமைப்பு பணிகள் காரணமாக மற்றொரு பாலத்தில் வாகனங்களை அனுமதித்தனர்.

இந்நிலையில், பாலாற்று பாலம் பராமரிப்பு பணி காரணமாக, புக்கத்துறை கூட்டு சாலையில் இருந்து பழைய சீவரம் வழியாக செங்கல்பட்டுக்கு கனரக வாகனங்கள் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை மெய்யூர், பிலாப்பூர் வழியாக செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலை வழியாக சென்று சென்னை செல்கிறது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மட்டுமே புதிய பாலத்தில் அனுமதிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க - ஆன்லைன் மூலம் கடன் பெற்றுத் தருவதாக கூறி சக ஊழியர்களிடம் பண மோசடி.. கரூர் வாலிபர் கைது!

நாளை திங்கட்கிழமை என்பதால், வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவர் என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் இதன் காரணமாக, காவல்துறை சார்பாக மாற்றுப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்த பாலத்தில் நெரிசல் ஏற்பட்டதால், பல மணிநேரம் வாகனங்கள் நகரமுடியாமல் தவித்தன. இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக பயணிகள் மாற்றுபாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Chengalpattu, Chengalpet, Traffic