முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பொங்கல் விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

தனியார் பேருந்துகள் ,அரசு சிறப்புப் பேருந்துகள் மற்றும் கார்களில் பொதுமக்கள் தொடர்ந்து சென்னையை நோக்கி வருவதால் சென்னையில் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.  இதனால், பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் கடந்த 12ம் தேதி முதலே சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிப்பு, பணி, தொழில் நிமித்தமாக தங்கி இருப்போர்,சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் தமிழக அரசு விடுமுறை அறிவித்த நிலையிலும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில்

இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் பலர் இன்று சென்னை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். பொங்கல் முடித்து திரும்புவோருக்காக இன்று 7,755 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தனியார் பேருந்துகள் ,அரசு சிறப்புப் பேருந்துகள் மற்றும் கார்களில் பொதுமக்கள் தொடர்ந்து சென்னையை நோக்கி வருவதால் சென்னையில் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் விடுமுறைக்கு பிறகு கொரோனா அதிகரிக்க வாய்ப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து காவல் துறையினர் குறைந்த அளவே பணியில் இருப்பதால் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். மேலும்சிலர் இன்றும் நாளையும் சென்னையை நோக்கி வர இருப்பதால் மேலும் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

top videos

    மேலும் படிக்க: சிறுநீர் கழித்ததாக கூறப்படும் மாணவர் குற்றச்சாட்டில் உண்மையில்லை- காவல்துறை விளக்கம்

    First published:

    Tags: Perungalathur, Pongal, Pongal festival, Traffic