வாளுடன் வாட்ஸ் அப் வீடியோ: வாலிபர் கைது

கைது

அரசின் நடவடிக்கையும் மீறி, பிறந்த நாளுக்கு வாளால் கேக் வெட்டுவது, கையில் வாள் வைத்து நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டுதான் வருகின்றனர்.

  • Share this:
    தூத்துக்குடி மாவட்டத்தில் கையில் வாளுடன் சினிமா பாடலுக்கு ஆடி வீடியோ எடுத்ததுடன் அதனை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

    இளைஞர்கள் மத்தியில் ஆயுத கலாச்சாரம் ஏற்படுவது தடுக்க காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி சிலர், பிறந்த நாளுக்கு வாளால் கேக் வெட்டுவது, கையில் வாள் வைத்து நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது போன்ற செயல்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ் அப்பில் அண்மையில் வீடியோ ஒன்று பரவியது. அதில், இளைஞர் ஒருவர் கையில் வாளுடன் சினிமா பாடல்களுக்கும் வசனங்களுக்கு நடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன . இதையடுத்து,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர்  பொன்னரசுவிடம் சம்பந்தப்பட்டவர் யார் என்பதை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: ‘குழந்தை பிறந்த நேரம் சரியில்ல’: இளம் பெண்ணை வீட்டைவிட்டு துரத்திய கணவர் வீட்டார்!


     

    அவரது உத்தரவின் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு மேற்பார்வையில், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசவப்பபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் தர்மதுரை (22)  என்பவர்  வசவப்பபுரம் பசும்பொன்நகர் அருகே செல்லியம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாள் வைத்து பாட்டு போட்டு ஆடியதுடன் அதனை செல்போனில் ஒளிப்பதிவு செய்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்தது தெரியவந்தது.  இதையடுத்து, தர்மதுரையை கைது செய்த போலீசார்,  அவரிடம் இருந்த வாளையும் பறிமுதல் செய்தனர்.

    செய்தியாளர்: முரளி கணேஷ் - தூத்துக்குடி

    மேலும் படிக்க: குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி: 3வது அலையால் கோவைக்கு பாதிப்பு!

    Published by:Murugesh M
    First published: