என் பரம்பரையிலேயே நான் தான் கார் வாங்கியிருக்கேன் - ஜி.பி.முத்து ஆனந்த கண்ணீர்

என் பரம்பரையிலேயே நான் தான் கார் வாங்கியிருக்கேன் - ஜி.பி.முத்து ஆனந்த கண்ணீர்

ஜ.பி.முத்து

டிக் டாக் பிரபலம் ஜிபி.முத்து, தான் கார் வாங்கியதை தனது பரம்பரையிலேயே தான் தான் முதல் முதலில் கார் வாங்கி இருக்கிறேன் என்று ஆனந்த கண்ணீருடன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

 • Share this:
  டிக் டாக் பிரபலம் ஜிபி.முத்து, தான் கார் வாங்கியதை தனது பரம்பரையிலேயே தான் தான் முதல் முதலில் கார் வாங்கி இருக்கிறேன் என்று ஆனந்த கண்ணீருடன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் டிக்டாக் பிரபலம் ஜிபி.முத்து பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வரும் இவர் மாற்றுத்திறனாளி மனைவி அஜிதா மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர் மனைவி குழந்தைகளுடன் உடன்குடி பெருமாள் தெருவில் வசித்து வரும் இவருக்கு டிக் டாக்கில் அதிக அளவு ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்தனர். நாள்தோறும் இவர் வெளியிடும் வீடியோக்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து இழுக்க காரணம் தென் மாவட்டத்திற்கு உரித்தான எதார்தமான தமிழ் பேச்சில் செத்தபயல, நாரப்பயல என்பது தான். இவருக்கு தமிழகம் மட்டுமல்லாது அமெரிக்கா லண்டன் உள்ளிட்ட நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்கின்றனர்.

  டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய சரியான ஆப் இல்லை என்று சோகத்துடன் பல பதிவுகளை பதிவிட்டு வந்த இவர் இன்ஸ்டாகிராமம் உள்ளிட்ட ஆப்களில் தனது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கொரோனா காரணமாக தொழில் பாதிப்பு, தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் இதனால் கடை திறக்க முடியாமல் போனது. ஏற்கனவே தான் சம்பாதித்த அனைத்தையும் அழித்து விட்டதால் மனமுடைந்து போய் தற்கொலை முயற்சி செய்த இவர் தனது ரசிகர்கள் பிரார்தனையில் குனமடைந்து வீடு திரும்பினார்.

  இதனைத் தொடர்ந்து ஜிபி.முத்து பிரபலமான ஆதித்யா தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சியில் அறிமுகமாகி கூடுதல் பிரபலமாக தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் அவியல் தொவையல் என்ற சீரியலிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தற்போது இரண்டு படங்களுக்கு திரைப்பட இயக்குனர்களும் இவரிடம் ரகசியமாக பேசி ஒப்பந்தம் செய்துள்ளனர்.

  இந்த நிலையில் தான் ஜிபி முத்து தான் சம்பாதித்த பணத்துடன் நண்பர் உதவியில் நான்கரை லட்சம் ரூபாயில் ஐ 20 கார் வாங்கியிருக்கிறார். இந்த காரை வாங்கிய அவர் அளவில்லாத மகிழ்ச்சியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தனது பரம்பரையில் தான் தான் முதன் முதலில் கார் வாங்கி இருப்பதாக ஆனந்த கண்ணீரோடு வெளியிட்டிருக்கிறார் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  செய்தியாளர் - முரளி கணேஷ்
  Published by:Esakki Raja
  First published: