திருச்செந்தூர் அருகே கிராம மக்கள் இடுகாட்டிற்க்கு பாதை இல்லாததால் சுமார் 70 ஆண்டுகளாக வாய்க்கால் தண்ணீரிலும், வயலிலும் இறங்கி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இறந்தவரின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகிலுள்ள வன்னிமாநகரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் இடுகாடு இல்லாததால் அப்பகுதி மக்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இறந்தவர்களின் உடலை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தனி நபருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.
அந்த இடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை இல்லாததால், இறந்தவர்களின் உடலை பாசனத்திற்கு செல்லும் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் நடந்தும், விளைநிலம் வழியாக சென்றும், அடக்கம் செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கவலை தெரிவிக்கும் அப்பகுதியினர் சுமார் 70 ஆண்டுகளாக இடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை இல்லாததால் பாசனத்திற்கு செல்லக்கூடிய வாய்க்கால் வழியாக இறந்தவர்களின் உடலை சுமந்து செல்லும் போது சில நேரங்களில் இறந்தவரின் உடலை சுமந்து செல்ல முடியாமல் உடல் தண்ணீரில் விழுந்ததாகவும் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருவொற்றியூரில் இடிந்து விழுந்த அப்பார்ட்மென்ட் பகுதிகளில் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழு ஆய்வு
மேலும் இடுகாட்டிற்கு செல்வதற்கு கடும் சிரமங்கள் இருப்பதால் இடுகாட்டில் வைத்து இறந்தவருக்கு செய்யக்கூடிய இறுதி காரியங்களில் முதியவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் கவலை தெரிவித்தனர். எனவே ஊருக்கு வெளிப்புறமாக உள்ள அரசு புறம்போக்கு இடத்தை இடுகாட்டிற்கு ஒதுக்கித் தரவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: முரளி கணேஷ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.