தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீதான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக, ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் மூலமாக ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி நிரந்தர தொழிலாளர்கள், மறைமுக தொழிலாளர்கள், பணியாளர்கள் உட்பட 10,000 பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்பு அதில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்தார். ஆனால், அதன்படி யாருக்கும் எவ்வித வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்ததாகத் தெரியவில்லை.
Also read: மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு திட்டம் - ராமதாஸ் எதிர்ப்பு
குறிப்பிட்ட காரணத்துக்காக தொழிற்சாலையை மையப்படுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தினால் அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்பட்டு தற்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. எனவே, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்ல ஆயத்தமாகி உள்ளோம் என்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.