தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையத்திற்கு 6 மாத காலம் அவகாசம் நீட்டிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெயகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணைத்திற்கு 6 மாதகாலம் கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • Share this:
கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைப்பெற்ற போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை முந்தைய அதிமுக அரசு அமைத்து உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்ற அருணா ஜெகதீசன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அரசு அதிகாரிகள், ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர், பத்திரிகையாளர்கள் என பல தரப்பினரிடமும் பல்வேறு கட்டங்களாக  விசாரணை மேற்கொண்டார்.

இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு சமூகவிரோதிகளின் ஊடுருவலே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தது சர்ச்சை எழுந்த நிலையில், அவருக்கும் ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

Also read: கொடநாடு கொலை வழக்கு பிரச்சனையை எடப்பாடி பழனிசாமி சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

அதன் தொடர்ச்சியாக, துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்தும், பொருட்கள் சேதம் குறித்தும் விசாரித்து தயார் செய்ய இடைக்கால  அறிக்கையை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த மே மாதம் 14ம் தேதி சமர்ப்பித்தார்.

அதன்பின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போடப்பட்ட, புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்ட வழக்குகள் தவிர 38 வழக்குகளை திரும்ப பெற்றிடவும், மேலும் அது தொடர்புடைய 13 அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகளையும் திரும்ப பெற தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், முழு அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஆணையத்தின் கால அவகாசம் வரும் 22ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதுவே கடைசி கால அவகாசம் என்றும், இந்த காலக்கெடுவிற்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், முழு அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஆணையத்தின் கால அவகாசம் வரும் 22ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதுவே கடைசி கால அவகாசம் என்றும், இந்த காலக்கெடுவிற்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published by:Esakki Raja
First published: