ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

துப்பாக்கி சூட்டை டீவியில் பார்த்து தெரிந்துகொண்டதாக ஈபிஎஸ் கூறியது உண்மையல்ல... அருணா ஜெகதீசன் ஆணையம்

துப்பாக்கி சூட்டை டீவியில் பார்த்து தெரிந்துகொண்டதாக ஈபிஎஸ் கூறியது உண்மையல்ல... அருணா ஜெகதீசன் ஆணையம்

ஸ்டெர்லைட் போராட்டம்

ஸ்டெர்லைட் போராட்டம்

துப்பாக்கிச் சூடு குறித்து முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் உடனுக்குடன் தகவல் தெரிவித்ததாக அருணா ஜெகதீசன் அறிக்கை கூறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டை டீவியில் பார்த்து தெரிந்துகொண்டதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது உண்மையல்ல என்று அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்துள்ளது.

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதாக கூறி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உண்மையை கண்டறியும் வகையில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் இருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

  இந்த ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில், காவல்துறை நடவடிக்கைகளில் வரம்பு மீறல் இருந்தது என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை என்றும் முதல் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு தான் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு... வேட்டையாடுவது போல் செயல்பட்ட காவலர்... அருணா ஜெகதீசன் ஆணையம் தகவல்

  அறிக்கையில், துப்பாக்கிச் சூடு குறித்து முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் உடனுக்குடன் தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளது. மேலும், உளவுப் பிரிவு ஐஜியும் முதலமைச்சருக்கு தகவல் தெரிவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது.

  போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியது தவறு என்றும் அவரைப் போன்ற பிரபல நடிகர் கூறுவதை நம்பும் மக்கள் உள்ளபடியால் ஆதாரங்களை ஆராய்ந்தபிறகே அவர் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் கூறும் கருத்து பொதுமக்களை  தவறாக வழிநடத்தும் அபாயம் உள்ளதெனவும் அது பிரச்னைக்கு தீர்வு ஏற்படுவதற்கு பதிலாக அதை அதிகரித்துவிடும் அபாயம் உண்டு என்றும் ரஜினி போன்றவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது,

  Published by:Murugesh M
  First published:

  Tags: Thoothukudi protest, Thoothukudi Sterlite