ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு... வேட்டையாடுவது போல் செயல்பட்ட காவலர்... அருணா ஜெகதீசன் ஆணையம் தகவல்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு... வேட்டையாடுவது போல் செயல்பட்ட காவலர்... அருணா ஜெகதீசன் ஆணையம் தகவல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

Sterlite protest: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை என்றும் முதல் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு தான் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thoothukkudi (Thoothukudi), India

  ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது காவலர் சுடலைக்கண்ணு வேட்டையாடுவது போல் செயல்பட்டார் என அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதாக கூறி போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உண்மையை கண்டறியும் வகையில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் இருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

  இந்த ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில், காவல்துறை நடவடிக்கைகளில் வரம்பு மீறல் இருந்தது என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை என்றும் முதல் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு தான் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மாறாக தீ வைக்கப்பட்ட பின்பு துப்பாக்கி சூடு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஆணையம், “ துப்பாக்கி சூடு நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டிய படிப்படியான அணுகுமுறையை இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் கையாளப்படவில்லை. தப்பி ஓடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு பிரயோகம் செய்திருப்பது, அவர்கள் பின்மண்டையில் குண்டு புகுந்து முன்பகுதியில் வெளியேறியதன் மூலம் தெரியவந்தது. இறந்தவர்கள் அனைவருக்கும் இடுப்புக்கு மேல் தான் காயம் ஏற்பட்டுள்ளது. காவலர்களுக்குள் கூட்டு ஒருங்கிணைப்பு இல்லை” என தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: யானையையும் நரிகள் கொன்றுவிடும்... ஜெயலலிதா இறப்பு தொடர்பான அறிக்கையில் இடம்பெற்றிருந்த திருக்குறள் வரிகள்

  டி ஐ ஜி மற்றும் உதவி எஸ்பி உத்தரவிட்ட துப்பாக்கி சூடு ஐ.ஜி.க்கு கூட தெரியவில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், “ஐ ஜி மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள்ளே இருந்தும்

  டி ஐ ஜி தானாகவே துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். உளவுத்துறை எச்சரித்திருந்த போதும் அதற்கேற்ற உத்திகளை மேற்கொள்ளாதது ஐ ஜி.யின் தவறு. போரட்டக்காரர்களால் ஏற்படும் தீமையை விட துப்பாக்கி சூட்டால் நடத்தப்பட்ட தீமையே அதிகம்” என்று தெரிவித்துள்ளது.

  துப்பாக்கி சூட்டால் இறந்தவர்கள் குறித்து ஆங்காங்கே நின்று சிலாகித்துக் கொண்டிருந்தவர்கள் மீது எஸ்.பி. துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் எனவும்  சுடலைக்கண்ணு என்ற Shooter காவலர், அபாயகரமான துப்பாக்கியைக் கொண்டு 17 ரவுண்டுகள் சுட்டிருக்கிறார்.  காட்டில் வேட்டையாடுவது போல் அவர் செயல்பட்டுள்ளார். உணர்ச்சிவசப்பட்டு எஸ் பி தனது பாதுகாவலரின் துப்பாக்கியையே வாங்கி 9 ரவுண்ட் சுட்டு உள்ளார். இந்த காரணங்களால் காவல்துறையினர் வரம்பு மீறி செயல்பட்டு இருக்கிறார்கள் என்பது ஆணையத்தின் தீர்க்கமான முடிவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்- தீபக் திதி கொடுத்த தேதியை மேற்கோள் காட்டிய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை

  ஐ ஜி சைலேஷ் குமார் யாதவ், டி ஐ ஜி கபில்குமார் சரத்கர், எஸ் பி மகேந்திரன், துணை எஸ்பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர்

  கள் திருமலை, ஹரிஹரன் பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி, ரென்னெஸ், முதல் நிலை காவலர்கள் சங்கர், சுடலைக்கண்ணு, சதீஷ்குமார், கண்ணன், தலைமை காவலர் ராஜா, இரண்டாம் நிலை காவலர்கள் ராஜா, தாண்டவமூர்த்தி, காவலர் மதிவாணன் உள்ளிட்ட 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Thoothukudi protest, Thoothukudi Sterlite