தூத்துக்குடி மக்களவைத் தொகுதி

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.92% வாக்குகள் இங்கு பதிவாகின. 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி
தூத்துக்குடி
  • News18
  • Last Updated: March 25, 2019, 2:54 PM IST
  • Share this:
துறைமுக நகரமான தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்டது.

அதன் பின்னர் நடைபெற்ற 15-வது மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வின் ஜெயதுரை 3,11,017 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சிந்தியா பாண்டியன் 2,34,368 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

கடந்த 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் ஜெயசிங் தியாகராஜ் 3,66,052 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் ஜெகன் 2,42,050 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.


பா.ஜ.க கூட்டணியுடன் போட்டியிட்ட ம.தி.மு.க-வின் ஜோயல் 1,82,191 வாக்குகளைப் பிரித்து தி.மு.க-வின் தோல்விக்குக் காரணமானார். காங்கிரஸ் கட்சியின் சண்முகம் 63,080 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69.92% வாக்குகள் இங்கு பதிவாகின. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், அதன் விளைவாக நிகழ்ந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போன்றவைகள் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

First published: March 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்