தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இன்றுடன் ஓராண்டு கடந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
மே 22 தமிழகத்தின் வரலாற்று குறிப்புகளில் எழுதப்பட்ட யுத்தத் தினம். எந்த ஆயுதமின்றி நிராயுதபாணியாக அகிம்சை வழியில் போராடிய தூத்துக்குடி மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் சுவடுகளை தாங்கி நிற்கும் தினம் இன்று. சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனக்கோரி 99 நாட்கள் அமைதியாக போராடி வந்த தூத்துக்குடி மக்கள், 100-வது நாள் அன்று மாதாகோவிலில் இருந்து ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாணவி வெனிஸ்டா ஸ்னோலின் உள்ளிட்ட 13 உயிர்கள் மண்ணில் சரிந்தது. துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தங்களது இன்னுயிரை இழந்த 13 பேரின் நினைவலைகளை சுமந்து நிற்பதாக தூத்துக்குடி மக்கள் கூறுகின்றனர்
துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்கவும், அமைச்சரவையைக் கூட்டி ஒரு கொள்கை முடிவினை எடுத்து நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு போராட்டத்தின்போது நோக்கம் நிறைவேறியபோதும், போராட்டம் சதை கிழிந்து விழும் ரத்தத்தோடுதான் முடித்து வைக்கப்படுகிறது. நியாயம் கிடைத்தே தீரும் என தூத்துக்குடி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Also see...5 வருடங்களாக குழந்தை பேறு இல்லாததால் தம்பதி தற்கொலை!
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.