Home /News /tamil-nadu /

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் கொடூரமானது... 18 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை - அருணா ஜெகதீசன் ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் கொடூரமானது... 18 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை - அருணா ஜெகதீசன் ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு 18 காவல் அதிகாரிகளே பொறுப்பு என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India
    ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. போராட்டங்கள் நூறாவது நாளை எட்டியதையொட்டி, தூத்துக்குடியில் மே 22-ம் தேதி ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணி நடத்தினர். பேரணியில் சென்றவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. . இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் 4-ந் தேதி தனது விசாரணையை தொடங்கியது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணை, சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் குழு வழங்கியது.

    இந்த அறிக்கையில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொடூரமான செயல் என்று கூறப்பட்டுள்ளது. தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் போராட்டக்கார்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, மறைவிடங்களிலிருந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடந்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. பூங்காவுக்குள் மறைந்திருந்த போலீசார் போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தியதாகவும், எங்கிருந்து துப்பாக்கி குண்டு வருகிறது என்பதை அறியாத மக்கள் தலைதெறிக்க அங்குமிங்குமாக ஓடியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : மேல்முறையீடு செய்த இபிஎஸ்.. உடனடியாக கேவியட் மனு தாக்கல் செய்த ஓபிஎஸ்

    ஐ.ஜி., சைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட 18 காவல் அதிகாரிகளே துப்பாக்கிச் சூட்டிற்கு பொறுப்பு என்றும், வரம்பை மீறிய அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அருணா ஜெகதீஷன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. கலவரத்தை கையாளத் தவறிய அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது

    துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகளை ஆய்வுசெய்ததில், குருவிகளை சுட்டு வீழ்த்துவது போல் long range துப்பாக்கிகளை பயன்படுத்தியதும், உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, பின்னால் இருந்து சுடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது

    கலவரத்தின் போது காவல் துறையின் நிலை ஆணைகள் பின்பற்றப்படவில்லை. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அரசு கூறிய விளக்கத்திற்கு ஆதாரங்கள் இல்லை என கூறப்பட்டுள்ளது ஒரு காவலரைத் தவிர, காவல் துறையினர் யாரும் காயம் அடையவில்லை என்பதால் தற்காப்புக்காக சுட்டதாக சொல்வதிலும் உண்மையில்லை:

    துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவலே காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் வைக்கப்பட்டிருந்ததாகவும், உரிய உத்தரவுகள் இன்றியே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

    கலவரம் வெடிக்கும் என்று முன்கூட்டியே உளவுத்துறை எச்சரித்தபோதும், களத்தில் இருந்த அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை, போராட்டத்தில் சமூகவிரோத சக்திகள் புகுந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அருணா ஜெகதீசன் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Thoothukudi gun shoot

    அடுத்த செய்தி