• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தூத்துக்குடி அருகே டீ குடிக்க வெளியே சென்ற வாலிபர் தலை துண்டித்து படுகொலை!

தூத்துக்குடி அருகே டீ குடிக்க வெளியே சென்ற வாலிபர் தலை துண்டித்து படுகொலை!

தூத்துக்குடி அருகே டீ குடிக்க வெளியே சென்ற வாலிபர் தலை துண்டித்து படுகொலை!

தூத்துக்குடி அருகே டீ குடிக்க வெளியே சென்ற வாலிபர் தலை துண்டித்து படுகொலை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் டீ குடிக்க வெளியே சென்ற ஸ்டாலின் காலனியை சேர்ந்த மதன்குமார் என்ற பெயிண்டர். மந்திதோப்பு அருகே மர்மான முறையில் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பணியில் இருந்த மருத்துவர் உடற்கூறாய்வு செய்ய மறுத்தார். இதுகுறித்த செய்தி நியூஸ் 18ல் வெளியானதை தொடர்ந்து மதன்குமார் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் பொய்யாழி மகன் மதன்குமார் (21). பெயிண்டர். மேலும் அவ்வப்போது சமையல் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை மதன்குமார், டீக்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து தனது பைக்கினை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Also read: இளம்பெண்களை கொத்தடிமைகளாக பயன்படுத்திய பஞ்சாலை நிர்வாகம் - 7 பெண்களை மீட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர்

இந்நிலையில் மந்தித்தோப்பு  தனியார் குடிநீர் நிறுவனம் அருகே உள்ள பகுதியில் மதன்குமார் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து மேற்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தை டிஎஸ்பி உதயசூரியன் பார்வையிட்டார். மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து போலீசார் மதன்குமார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஷரன் உடற்கூறாய்வு செய்ய முடியாது தூத்துக்குடி அல்லது நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லுங்கள் என்ற தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் கிடைத்தும் மதன்குமார் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் தான் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிணவறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து செய்தி நியூஸ் 18ல் ஒளிப்பரப்பானது. இதையெடுத்து தலைமை மருத்துவர் கமலவாசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுன் பேச்சு வார்தை நடத்தினர். கோவில்பட்டியில் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவர் ஷரன் உடற்கூராய்வு செய்ய தலைமை மருத்துவர் உத்தரவிட்டார்.

இதன் பின்னர் மதன்குமார் உடல் உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டீ குடிக்க வெளியே சென்றவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதன்குமார் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மதுபாட்டில், குளிர்பான பாட்டில் மற்றும் அவரது பைக் இருந்துள்ளார். மதன்குமாருடன் பைக்கில் யாரூம் வந்தார்களா? இவ்வளவு தூரம் வந்து மது அருந்த வேண்டிய அவசியம் என்ன ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், மேலும் மது அருந்தும் போது மதன்குமார் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: