Home /News /tamil-nadu /

திருடுபோன நகையை கண்டுபிடித்து தரும்படி கனிமொழியிடம் கண்ணீர் விட்டு அழுத பெண்

திருடுபோன நகையை கண்டுபிடித்து தரும்படி கனிமொழியிடம் கண்ணீர் விட்டு அழுத பெண்

கனிமொழி

கனிமொழி

கோவில்பட்டியில் நகை திருடு போய் விட்டது என கனிமொழியிடம் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

கிராம சபை கூட்டத்தில் மக்கள் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது தெற்கு இலந்தை குளத்தினை சேர்ந்த சங்கரி என்ற பெண் தனது வீட்டில் 6 அரை பவுன் தங்க நகை திருடு போய்விட்டது என்றும், அதை கண்டுபிடித்து தர வேண்டும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தி.மு.க எம்.பி கனிமொழியிடம்  கண்ணீர் விட்டு அழுதார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு இலந்தை குளம் ஊராட்சியில் ஆத்திகுளம் கிராமத்தில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. அந்த ஊராட்சியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

இதனை தொடர்ந்து கனிமொழி பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகளவில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அவர் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த காரணத்தால் உள்ளாட்சி துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கிராம சபை கூட்டத்திற்கு சென்று மக்களின் கோரிக்கையை கேட்டு, அதனை நிறைவேற்ற வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார்.

ALSO READ |  விசிகவினர் பாஜக அலுவலகத்திற்கு வந்து புத்தகங்களை கொடுக்கலாம் – அண்ணாமலை அழைப்பு


இந்தாண்டு தனது நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்து எடுத்து உள்ளேன். அதற்கு முக்கியமான காரணம் இந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தான். உள்ளாட்சியில் பல இடங்களில் பதவிக்கு வரக்கூடிய பெண்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை பயன்படுத்த முடியாமல் அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஆண்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு அவர்களை செயல்பட விட முடியாத நிலை உள்ளது. ஆனால் இந்த ஊராட்சி மன்ற தலைவர் அதையெல்லாம் தாண்டி செயல்பட்டு வருகிறார் என்றார்.



கண்ணீர் விட்டு அழுத சங்கரி



கிராம சபை கூட்டத்தில் மக்கள் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டு இருக்கும் போது தெற்கு இலந்தை குளத்தினை சேர்ந்த சங்கரி என்ற பெண் கடந்த 17ம்தேதி தனது வீட்டில் 6 அரை பவுன் தங்க நகை திருடு போய்விட்டது என்றும், அதை கண்டுபிடித்து தர வேண்டும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கனிமொழியிடம் கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து கனிமொழி கோவில்பட்டி டி.எஸ்.பி உதயசூரியனை அழைத்து விரைந்து குற்றவாளியை கண்டுபிடித்து நகையை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்றார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Kanimozhi, Thoothukodi

அடுத்த செய்தி