Home /News /tamil-nadu /

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பி கைது...யார் இவர்?

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பி கைது...யார் இவர்?

விஜய நல்லதம்பி

விஜய நல்லதம்பி

ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் அளித்திருந்த விஜயநல்லதம்பி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த அவரை கோவில்பட்டியில்  இன்று காலை 5.30 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பி என்பவரை போலீசார் கைது செய்தனர். 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவரது ஆட்சி காலத்தில் ஆவினில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாகவும், ஆவினில்  வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததது புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் ராஜேந்திர பாலாஜியை தேடி வந்தனர்.

    கர்நாடகாவில் தலைமறைவாக இருந்த  ராஜேந்திர பாலாஜி கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இதனிடையேஉச்ச நீதிமன்றத்தில்  ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    இதையடுத்து, சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார்.இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் அளித்திருந்த விஜயநல்லதம்பி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த அவரை கோவில்பட்டியில்  இன்று காலை 5.30 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இதையும் படிங்க: காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை... போலீசார் தீவிர கண்காணிப்பு


    முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியான விஜயநல்லதம்பியிடம் அதிமுகவை சேர்ந்தர ரவீந்திரன் என்பவர் தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதற்காக ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார்.  எனினும் வேலையும் வாங்கி தராமல்,பணத்தையும் திருப்பி தராமல் விஜயநல்லதம்பி ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து ரவிந்திரன் விஜயநல்லதம்பி மீது புகார் அளித்தார்.  விஜய நல்லதம்பியோ, பலபேரிடம் ஆவினில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்ததாகவும் அவர் பணத்தை தருப்பி தராமல் மோசடி செய்ததாகவும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மேலும் படிங்க: ஆடுகளை குளிப்பாட்ட அழைத்துச் சென்ற 3 சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Aavin, Rajendra balaji

    அடுத்த செய்தி