• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குப்பை கிடங்காக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி!

குப்பை கிடங்காக காட்சியளிக்கும் அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி!

கோவில்பட்டி அரசு மருத்துவமனை

கோவில்பட்டி அரசு மருத்துவமனை

குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள இடம் அருகே தான் ரத்த பரிசோதனை இடம், சித்த மருத்துவ அறை, மருந்து வழங்கும் இடம் உள்ளது. அங்கு சுகாதாரமற்ற நிலை உள்ளதால் நோய்தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 2மாதங்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை என்பதால் குப்பைகள் மலைபோல காட்சியளிக்கின்றன.  துர்நாற்றம் வீசி வருவதால் சிகிச்சை பெற வருபவர்கள் அவதிப்படுவது மட்டுமின்றி தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி,  நெல்லை, தென்காசி. விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயன்பெற்று வருகின்றனர். தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புற நோயாளிகளாகவும், 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் சேரக்கூடிய குப்பைகள் இங்கு பணியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு நகராட்சி குப்பை கிடங்கில் ஒப்படைக்கப்பட்டு வந்தது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் டிராக்டர் மூலமாக நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்தச் சூழ்நிலையில் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டுசெல்லப்படும் குப்பைகளை வாங்க நகராட்சி நிர்வாகம் மறுத்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக குப்பைகள் வாங்கப்படவில்லை என்பதால் அரசு மருத்துவமனையில் மலைபோல் குவித்து வைக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி தொற்று நோய்களும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக சிகிச்சைக்கு வரக்கூடிய பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள இடம் அருகே தான் ரத்த பரிசோதனை இடம், சித்த மருத்துவ அறை, மருந்து வழங்கும் இடம் உள்ளது. அதிலும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் ரத்த பரிசோதனை செய்ய இப்பகுதிக்கு வரும் சூழ்நிலை உள்ளது. ஆனால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் அவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மிகுந்த சிரமத்துடன் இப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

மேலும் படிங்க: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கார்டுக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்து இருக்கிறார்களா..?


பிளாஸ்டிக் பைகள், இளநீர் குடுவைகள், பிளாஸ்டிக் கப்புகள் என அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவைகளில் மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை நகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்பதால் அரசு மாவட்ட தலைமை மருத்துமனை குப்பை கிடங்காக மாறி வருகிறது.

குப்கைள் அகற்றப்படாததால் அதிகமான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதி வழியாக செல்ல முடியவில்லை என்றும், நோய்த்தொற்று உருவாகும் இடமாக அரசு மருத்துவமனை மாறி வருவதாகவும், நோய்க்கு சிகிச்சை பெறவந்தால், கூடுதலாக ஒரு நோயை பெற்றுச்செல்லும் இடமாக மாறி உள்ளதாகவும், பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குப்பையை அகற்றும் விசயத்தில் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டினால் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்?

இதுகுறித்து அரசு மாவட்ட தலைமை மருத்துமனை நிர்வாகத்திடம் கேட்டபோது குப்பைகளை எடுத்து செல்வது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக நகராட்சி சுகாதார அலுவலரிடம் கேட்ட போது, அரசு மருத்துவமனையில் உள்ள பொது கழிவுகளை அவர்களே மறு சுழற்சி செய்து கொள்ளவும், எரிந்து கொள்ளவும் இயந்திரங்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகையால் நகராட்சி நிர்வாகம் அரசு மருத்துவமனை குப்பைகளை வாங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: