நியூஸ் 18 செய்தி எதிரொலி - கோவில்பட்டியில் வாழைப்பழ வியாபாரியை நேரில் சந்தித்து பாராட்டிய கனிமொழி எம்.பி!

கனிமொழி பாராட்டு

  • Share this:
கொரோனா ஊரங்கு காலத்தில் பொதுமக்களின் பசியை போக்கும்வகையில் இலவசமாக வாழைப்பழம் வழங்கிவந்த பழ வியாபாரிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம். கோவில்பட்டி கடலையூர் சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தம்  முத்துப்பாண்டி என்பவர் பழக்கடை வைத்துள்ளார்.  கொரோனா  ஊரடங்கில் தனது பூட்டிய கடை முன், தினமும் வாழைப்பழ தர்களை தொங்க விட்டு செல்வது மட்டுமின்றி, அதற்கு மேல், ஒரு சிலேட்டில், "பசி எடுத்தால் எடுத்து சாப்பிடவும்"  என  முத்துப்பாண்டி எழுதிவைத்துள்ளார். அந்த வழியாகச் செல்பவர்கள் இதைப் பார்த்து வியப்படைந்தனர். அவ்வழியாக செல்பவர்கள், பாதசாரிகள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் என ஏராளமானோர் அந்த வாழைப்பழங்களை எடுத்து சாப்பிட்டுச் செல்கின்றனர்.

மேலும் அருகில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இருப்பதால் அங்கு வருபவர்களில் உணவு கிடைக்காமல் தவிப்பவர்களும் இந்த பழங்களை எடுத்து சாப்பிட்டு வருகின்றனர். தினமும் 4 முதல் 5 வாழைத்தார்களை முத்துப்பாண்டி வைத்துச்செல்கிறார். ஊரடங்கில் அவதிப்பட்டு வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிபவர்களுக்கு, தன்னால் முடிந்த உதவியை செய்யலாம் என்று நினைத்து, இப்படிப்பட்ட ஒரு உன்னத செயலில் ஈடுபட்டு வரும் முத்துப்பாண்டிக்கு   பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது. இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு   ஊடகத்திலும் செய்தி வெளியாகியிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் கோவில்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி வந்திருந்தார்.  அப்போது, முத்துபாண்டி வாழைப்பழ கடைக்கு நேரில் சென்ற கனிமொழி, அவரை சந்தித்து பாராட்டினர். மேலும் 2 புத்தகங்களையும் அவருக்கு பரிசாக வழங்கினார். பதிலுக்கு முத்துபாண்டி கனிமொழி எம்.பி.க்கு வாழைப்பழம் வழங்கினார்.

செய்தியாளர்: மகேஷ்வரன் -கோவில்பட்டி


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: