அரிவாளுடன் ஆட்டம்போட்ட இளைஞர்.. வாட்ஸ் அப்பில் தீயாய் பரவிய வீடியோ

கைதான இளைஞர்

சினிமா பாடலுக்கு கையில் அரிவாள் வைத்து ஆடிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  தூத்துக்குடி  பகுதியில் பாட்டு போட்டு அரிவாள் வைத்து ஆடியதோடு அதனை செல்போனில் படம்பிடித்து  வாட்ஸ்அப்பில் பரப்பியவர் கைது.

  தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் பிரபல தமிழ்சினிமா பாடலுக்கு கையில் அரிவாள் வைத்து ஆடி அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதோடு நில்லாமல் அதனை வாட்ஸ் அப் குழுக்களில்  அனுப்பியுள்ளனர். இந்த வீடியோவானது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதுதொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டு அதனை வாட்ஸ் அப்பில் அனுப்பும் நபர் யார் என்பதை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

  Also Read: பிச்சைக்காரரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை.. டீ குடிக்கும் நேரத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

  இதனையடுத்து முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர்  பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் வீடியோவில் அரிவாளுடன் நடனமாடும் நபர்  முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் சுப்பையா (30)  என்பது தெரியவந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவரது வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரிவாள் வைத்து பாட்டு போட்டு ஆடியதுடன் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து முறப்பநாடு காவல் நிலைய காவலர்கள் இதுதொடர்பாக  வழக்குப்பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தார்.

  செய்தியாளர்: முரளிகணேஷ் (தூத்துக்குடி)   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: