• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வீட்டை எழுதி தராததால் வெந்நீரை ஊற்றிய மனைவி.. உயிருக்கு ஆபத்து என கதறும் கணவர்

வீட்டை எழுதி தராததால் வெந்நீரை ஊற்றிய மனைவி.. உயிருக்கு ஆபத்து என கதறும் கணவர்

கணவர் மீது தாக்குதல்

கணவர் மீது தாக்குதல்

வேலையை முடித்து விட்டு இனிகோ வீட்டிற்கு சென்ற போது, மனைவி மரிய வினோ, வீட்டை எழுதி தராத ஆத்திரத்தில் தரக்குறைவாக பேசி, தான் ஏற்கனவே திட்டமிட்டபடி தயார் செய்து வைத்திருந்த வெந்நீரை அவர் மீது ஊற்றியுள்ளார்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  வீட்டை எழுதி தர வலியுறுத்தி கணவன் மீது மனைவியே வெந்நீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல் வெந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் கணவன், "தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை" என மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபடியே வாக்குமூலம் அளித்துள்ளார்.  இது தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர்  இனிகோ(41). இனிகோவிற்கும், மரிய வினோ என்பவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இனிகோவிற்கு மது அருந்து பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவி மரிய வினோ, கணவன் இனிகோவின் பெயரில் உள்ள வீட்டினை தன் பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு கணவன் இனிகோ மறுத்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே இதுசம்பந்தமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் ; வேலையை முடித்து விட்டு இனிகோ வீட்டிற்கு சென்ற போது, மனைவி மரிய வினோ, வீட்டை எழுதி தராத ஆத்திரத்தில் தரக்குறைவாக பேசி, தான் ஏற்கனவே திட்டமிட்டபடி தயார் செய்து வைத்திருந்த வெந்நீரை அவர் மீது ஊற்றியுள்ளார்.  இனிகோ உடல் வெந்து நிலைகுலைந்து போயுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.  மேல் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இனிகோ தன் மனைவி மரிய வினோ மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் சூரங்குடி போலீசார் மரிய வினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஷாருக்கானின் மகன் என்பதாலேயே ஆரியன் கானைக் குறிவைப்பதா? சீமான் கண்டனம்


மேலும் இனிகோ உடல் வெந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதே "என் உயிருக்கு பாதுகாப்பில்லை  மனைவியிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து விசாரணையில், சொத்தை எழுதி கொடுக்க கட்டாயப்படுத்தி, மரிய வினோ கணவருக்கு கண்ணில் மிளகாய் பொடி தூவதல் என பல்வேறு வழிகளில் இடைஞ்சல் கொடுத்து துன்புறுத்தி வந்ததும், கொலை செய்யும் அளவிற்கு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: நெல்லையில் பைனான்சியர் சரமாரியாக வெட்டிப்படுகொலை.. போலீஸார் தீவிர விசாரணை

இந்த நிலையில் இனிகோவின் மனைவி மரிய வினோ  ஒருவருடன் உல்லாசமாக ஒருவருடன் இருந்தபோது இனிகோ ஜன்னல் வழியாக பார்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மரிய வினோ ஜன்னல் வழியாக  கணவர் இனிகோ மீது வெந்நீரை ஊற்றியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்பட வெண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: