முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 500 மெட்ரிக் டன்னுக்கு மேல் ஆக்சிஜன் உற்பத்தி: ஸ்டெர்லைட் ஆலை தகவல்!

500 மெட்ரிக் டன்னுக்கு மேல் ஆக்சிஜன் உற்பத்தி: ஸ்டெர்லைட் ஆலை தகவல்!

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

கொரோனா பரவல் காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்ததால், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து அங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

!தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இதுவரை 500 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்த்ல் வன்முறை ஏற்பட்டது. போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, ஆக்சிஜன் தயாரிப்புக்காக மட்டும் 4 மாதங்களுக்கு ஆலையை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஸ்டெர்லைட் ஆலையில் இன்று வரை 500 மெட்ரிக் டன் உற்பத்தி என்னும் மைல் கல்லை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், “கொரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து இதுவரை மொத்தம் 542.92 மெட்ரிக் டன் மருத்துவ தர திரவ ஆக்ஸிஜன், மற்றும் 265 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வாயு சிலிண்டர்கள் உற்பத்தி செய்யப்ட்படுள்ளது.

மேலும் படிக்க.. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் சிக்னல்கள் செயல்படும்: சென்னை பெருநகர காவல் ஆணையர்!..

மருத்துவ ஆக்ஸிஜன் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, நமக்கல், கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், தென்காசி, தர்மபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், கருர், சேலம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மைல்கல்லை அடைய எங்களுக்கு உதவிய எங்கள் சமூக உறுப்பினர்கள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் வணிக கூட்டமைப்பினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona, Oxygen, Thoothukudi Sterlite