தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, மீண்டும் பனை ஓலைக்கொட்டான் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொழில் புத்துணர்ச்சி பெற தமிழக அரசு உதவ வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மீண்டும் மஞ்சப் பை போன்ற திட்டங்கள் மூலம் தமிழக அரசு பிளாஸ்டிக் ஓழிப்பினை முன்னெடுத்துள்ளது. இதனால், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக கருதப்படும் பொருட்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள நாகலாபுரத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனை ஓலைக்கொட்டன்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் 4 வகையான பனை ஓலைக்கொட்டன்கள் ஸ்வீட்ஸ் கடைகள், காரம், இனிப்பு கடைகள், இறைச்சி கடைகளுக்கும், வெல்லம் விற்பனை செய்வதற்கும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஸ்வீட்ஸ், காரம், இனிப்பு வகைகளை பனை ஓலைக்கொட்டன்களில் வைப்பத்தினால் அவை எளிதில் கெட்டுப்போகாது என்பதால் கடை உரிமையாளர்கள் அதிகளவில் வாங்கி வந்தனர்.
நாகலாபுரத்தில் தயாரிக்கப்படும் பனை ஓலைக்கொட்டன்கள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பபட்டு வந்த நிலையில் பிளாஸ்டிக் ஆதிக்கம் பனை ஓலைக்கொட்டன் தொழிலை முற்றிலுமாக பாதித்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பினை முன்னெடுத்த காரணத்தினால் ஓலைக்கொட்டன்களுக்கு மவுசு கூடியது மட்டுமின்றி இதனை நம்பி இருந்த தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியாக வேலையும் கிடைத்தது.
இதையும் படிங்க: சிறுவனை கொலைவெறியுடன் கடிக்க துரத்தும் நாய்கள் - நெஞ்சை பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
ஸ்வீட்ஸ், காரம், இனிப்பு கடைகள் மட்டுமின்றி இறைச்சிகடைகளிலும் பனை ஓலைக்கொட்டன்கள் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டது. பனை ஓலைக்கொட்டன்கள் தேவை அதிகரித்த காரணத்தினால் நாகலாபுரம் பகுதியில் இரவு பகலாக பனை ஓலைப்பெட்டிகள் தயாரிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக பனை ஓலைக்கொட்டன்கள் தொழில் முடங்கியது.
தற்பொழுது அதில் இருந்து கொஞ்சம், கொஞ்சமா மீண்டும் வரும் நிலையில், தமிழக அரசு மீண்டும் பிளாஸ்டிக் ஒழிப்பினை வலியுறுத்தி வருவது மட்டுமின்றி, பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று அரசு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது பனை ஓலை பெட்டிகள் தயாரிப்பு தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சள் பைகளை பயன்படுத்த வலியுறுத்தும் தமிழக அரசு ஸ்வீட்ஸ், காரம் கடைகள், பேக்கரி மற்றும் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக்கினை தவிர்த்து, ஓலைக்கொட்டான்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்று பனை ஓலைகொட்டான்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: மகள்களுடன் கிணற்றில் சடலமாக மிதந்த ஆட்டோ ஓட்டுனர்.. செங்கல்பட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இதனால் தங்களது தொழில் மீண்டும் வேகம் எடுப்பது மட்டுமின்றி, தங்களது வாழ்வாதரமும் உயரம் என்று தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாது சிறு தொழில்களுக்கு வழங்குவது போல தங்களுக்கும் மானிய விலையில் கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்தால் தங்கள் தொழிலை மேம்படுத்தி கொள்ள உதவும் என்றும், மக்கள் விரும்பும் வகையிலும் தங்களால் பல வகையான வண்ண ஓலைக்கொட்டான்களை தயாரிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
ஓலைக்கொட்டான்களில் வைக்கப்படும் இனிப்பு,காரம் உள்ளிட்டவை கொட்டுப்போகமால் இருப்பது மட்டுமின்றி, இயற்கையான சுவையும் உண்டு என்பதால் ஒரு காலத்தில் அனைவராலும் அதிகளவில் விரும்பட்டு வந்தது. மீண்டும் அதற்கு தமிழக அரசு புத்துணர்ச்சி அளிக்க அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கினால் அவர்களுடைய தொழில் வளர்ச்சி அடையும், வாழ்வாதரம் உயரும் என்கிறார் அப்பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம்.பிளாஸ்டிக் ஒழிப்பினை முன்னிறுத்தும் தமிழக அரசு பனைஓலைக்கொட்டான் தொழில் மீண்டும் புத்துணர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Plastic Ban, Plastics, Tuticorin