Home /News /tamil-nadu /

பல கோடி ரூபாய் மதிப்புள்ள தாது மணல் கடத்தல்: 5 பேர் கைது... விவி மினரல்ஸ் மீது வழக்குப்பதிவு

பல கோடி ரூபாய் மதிப்புள்ள தாது மணல் கடத்தல்: 5 பேர் கைது... விவி மினரல்ஸ் மீது வழக்குப்பதிவு

வி.வி.மினரல்ஸ் நிறுவனம்

வி.வி.மினரல்ஸ் நிறுவனம்

தாது மணல் கடத்தல் 4 பிரிவுகளின் கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு 5 பேர் கைது - 40 டன் தாதுமணல் பறிமுதல்

    தென் தமிழக கடற்கரையில் இல்மினெட் உள்ளிட்ட தாது மணல் அதிக அளவில் கிடைக்கிறது. அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் திசையன்விளையை சேர்ந்த வைகுண்டராஜனின் வி.வி.மினரல் நிறுவனமும் அது சார்ந்த தொழிலில் அவரது உறவினர்களின் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.

    தூத்துக்குடி, குமரி, திருநெல்வேலி மாவட்ட எல்லைகளில் அது சார்ந்த தொழிற் கூடங்கள் இருக்கிறது. அந்த தொழிலில் முறைகேடுகள் நடப்பதாக சமூக ஆர்வலா்கள் புகாா் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2013ம் ஆண்டு தாது மணலை எடுக்க மத்திய அரசு தடை விதித்தது.

    ஆனாலும் அந்த தொழில் அப்படி இப்படியென்று வெளியில் தெரியாமல் நடந்து வந்ததால், அதை முற்றிலும் முடக்கும் வகையில் 2017ம் ஆண்டு தாது மணல் வைத்திருந்த குடோன்கள் சீல் வைக்கப்பட்டன.

    Also Read:  நிர்ணயித்ததை விட 10 மடங்கு கட்டண கொள்ளையில் ஈடுபடும் பிரபல கல்லூரி

    அதனை சிறப்பு குழு கண்காணிக்க வேண்டும் என்றும், அதனை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாதம்தோறு சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் தற்போது கூட தாது மணல் கடத்தபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    லாரிகளில் 40 டன் தாதுமணல்..

    இந்நிலையில் நேற்று தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள விவி டைட்டானியம் பிக்மென்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு லாரிகளில் தாது மணல் கொண்டு செல்லப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிப்காட் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  சந்தேகத்தின்பேரில் அவ்வழியாக வந்த லாரிகளை மறித்து போலீசார் சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட  தாது மணலை கடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

    40 டன் தாதுமணல்


    இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த பல கோடி மதிப்பிலான 40 டன் தாதுமணலை போலீசார் பறிமுதல் செய்து லாரியை சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் புவியியல் துறை அதிகாரி சுகிதா ரஹீமா லாரியில் இருந்த தாது மணலை ஆய்வுக்காக எடுத்துச் சென்றார்.

    புவியியல் துறை அதிகாரிகள் விசிட்:

    இதையடுத்து தூத்துக்குடி தாசில்தார்  மற்றும் புவியியல் துறை அதிகாரி சுஹைதா ரஹீமா, ரூரல் காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலான அதிகாரிகள் விவி டைட்டானியம்  நிறுவனத்தின் உள்ளே சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் உரிய அனுமதி இன்றி சட்டத்திற்குப் புறம்பாக தொ்மல் நகா் பகுதியில் உள்ள விவி குடோனில் இருந்து தாது மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடா்ந்து மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கன்னா அளித்த புகாரில் விவி டைட்டானியம் பிக்மென்ஸ் நிறுவனத்திற்கு கடத்தி வரப்பட்ட 40 டன் தாதுமணல், கடத்தலுக்கு பயன்படுத்திய 5 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், விவி மினரல்ஸ் உரிமையாளர் ( பெயா் குறிப்பிட்ட விலை) மற்றும் 5 லாரி டிரைவர்கள் உள்பட மொத்தம் 6 பேர் மீது நம்பிக்கை மோசடி, சீல் வைக்கப்பட்ட இடத்தில் அனுமதி இன்றி உள்ளே புகுதல், திருடுதல் மற்றும் கனிம வளம் கடத்தல் ஆகிய நான்கு பிரிவுகளில் ( 448, 379, 420, 24(4) ) வழக்கு பதிவு செய்து லாரி டிரைவா்கள் 5 பேரை கைது செய்தனர் தொடா்ந்து விசாரணை செய்து வருகிறார்.

    முரளி கணேஷ், செய்தியாளர் - தூத்துக்குடி

     
    Published by:Arun
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Tuticorin

    அடுத்த செய்தி