Home /News /tamil-nadu /

பூமிக்குள் புதைத்து நூதன முறையில் புகையிலை பொருட்கள் விற்பனை..

பூமிக்குள் புதைத்து நூதன முறையில் புகையிலை பொருட்கள் விற்பனை..

குட்கா

குட்கா

வீடு, கடைகள், குடோன்களில் பதுக்கி வைத்திருந்தால் போலீசார் கண்டுபிடித்து விடுகின்றனர் என்பதால்  புகையிலை பொருள்களை பதுக்கவும் விற்கவும் புது புது யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ஆற்று மணலில் டிராமில் வைத்து புதைத்து வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தோட்டத்திற்கும் சீல் வைத்தனர். வாட்ஸ் அப் புகார் மூலமாக புகையிலை பதுக்கி வைத்திருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பார் ஆற்றங்கரையோரத்தை ஒட்டிய கேசவன் நகர் பகுதியில் கார்த்திக் ராஜ் என்பவரது தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி  வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த  சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், ஆற்று மணலில் சுமார் 5 அடி ஆழத்தில் பிளாஸ்டிக் டிரம்மில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ புகையிலை பொருட்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தோட்டத்தை சீல் வைத்து மூடினர்.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் கூறுகையில், மாநில உணவு பாதுகாப்பு வாட்ஸ் அப் எண்ணிற்கு கிடைத்த ரகசிய தகவல் மூலமாக கார்த்திக் ராஜ் என்பவர் பயன்படுத்தி வரும் பன்றி பண்ணை மற்றும் தோட்டங்களில்  சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்,  தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட 400 கிலோ எடையுள்ள புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த உணவு பொருள்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பட்டு, உணவு பாதுகாப்பு தரச்சட்டம் மற்றும் காவல்துறையின்  குற்றவியல் சட்டம் மூலமாக வழக்குபதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை டாஸ்மாக் பாராக மாறிய அவலம்.. குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள்


புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தோட்டமும், நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த தோட்ட உரிமையாளர் என்று கூறப்படும் கார்த்திக்ராஜ் மீது சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக விளாத்திகுளத்தில் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பக்கம் திரும்பி கார்த்திக்ராஜ் கல்லா கட்டி வருவதாகவும், உணவு பாதுகாப்பு அலுவலர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.



வீடு, கடைகள், குடோன்களில் பதுக்கி வைத்திருந்தால் போலீசார் கண்டுபிடித்து விடுகின்றனர் என்பதால்  புகையிலை பொருள்களை பதுக்கி வைக்கவும், அதனை விற்பனை செய்யவும் பல்வேறு யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இது ஒரு வகை என்றும், இதற்கொன்று சில ரகசிய வார்த்தைகள் இருப்பதாகவும், சின்ன ஆடு, பெரிய ஆடு, சிறுசு, பெருசு (பன்றி) என சில சங்கேத வார்த்தைகள் இருப்பதாகவும், இதனை பயன்படுத்தி தான்  பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சரக்குகள் இருசக்கர வாகனங்கள் மூலமாக தேவையான கடைகளுக்கு, விற்பனை செய்யபவர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: கன்னியாகுமரி மீனவர்கள் 25 பேர் செஷல்ஸ் கடற்படையால் சிறைபிடிப்பு


மேலும் வைப்பாற்றின் கரையோரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு பல சட்டவிரோதமான செயல்களுக்கு புகலிடமாக இருப்பதால் சம்பந்தபட்ட அரசு துறையினர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
 
Published by:Murugesh M
First published:

Tags: Banned Pan Gutka, Kovilpatti, Tuticorin

அடுத்த செய்தி