Home /News /tamil-nadu /

இறந்துபோனவருக்கு வருமான சான்றிதழ் வழங்கிய வருவாய்துறை; மகளின் திருமண உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் தாய்

இறந்துபோனவருக்கு வருமான சான்றிதழ் வழங்கிய வருவாய்துறை; மகளின் திருமண உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் தாய்

சந்திரகலா

சந்திரகலா

ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த சந்திரகலா கணவர் செல்லச்சாமிக்கு மாத வருமான 5 ஆயிரம் என்று குறிப்பிட்டது மட்டுமின்றி, கூலி தொழில் செய்து வரும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 32 ஆயிரம் என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இறந்தவருக்கு  வருவாய்துறையினர் வருமான சான்று அளித்துள்ளனர். இதனால்  மகளின் திருமண உதவி தொகைக்கு விண்ணப்பிக்க  முடியவில்லை என தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலூகா டி.சண்முகபுரம் அருகே உள்ள  குமரிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகலா.  தனது மகளுக்கு  திருமண உதவி தொகை திட்டதில் விண்ணப்பம் செய்வதற்கு எட்டயபுரம் தாலூகா அலுவலகத்தில் வருமான சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்  சந்திரகலா விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில்,  கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அவரது கணவர் செல்லச்சாமிக்கு மாதம் வருமான 5 ஆயிரம் என்று குறிப்பிட்டது மட்டுமின்றி, கூலி தொழில் செய்து வரும் சந்திரகலா குடும்பத்தின் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 32 ஆயிரம் என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  இறந்து போன தனது கணவருக்கு வருமானம் வருவதாக குறிப்பிட்டு வருவமான சான்றிதழ் அளித்த காரணத்தினால் தன்னால் திருமண உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் பாதிக்கப்பட்ட சந்திரகலா தெரிவித்தார்.



விசாரணை நடத்தாமல் தவறாக சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, உரிய விசாரணை நடத்தி வருமான சான்றிதழ் வழங்க வேண்டும் என  கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் மனு அளித்துள்ளார். வரும் 8ம் தேதி அவரது மகளுக்கு திருமணம் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு


 
Published by:Murugesh M
First published:

Tags: Revenue department, Tuticorin

அடுத்த செய்தி