• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காலை ஒரு சென்டர், மதியம் ஒரு சென்டர்... 70 கிமீ தூரம் எப்படி செல்வது? தவிப்பில் தேர்வர்கள்

காலை ஒரு சென்டர், மதியம் ஒரு சென்டர்... 70 கிமீ தூரம் எப்படி செல்வது? தவிப்பில் தேர்வர்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இரு தேர்வு மையங்களுக்கு இடையே 70 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வரை தூரம்  உள்ளதால் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்வு எழுதுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு துறை ரீதியான  பதவி உயர்வுக்கான தேர்வுக்கு காலையில் ஒரு தேர்வு மையமும், மாலையில் ஒரு தேர்வு மையமும்  ஒதுக்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதுபவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான தேர்வு வரும் 16ம்தேதி முதல் 23ம்தேதி வரை டி.என்.பி.சி மூலமாக நடைபெறவுள்ளது. ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை என தேர்வு எழுதும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில்  தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டு நேற்று வழங்கப்பட்டது. இதில் காலையில்  ஒரு தேர்வு மையமும், மாலை மற்றொரு தேர்வு மையமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு தேர்வு மையங்களுக்கு இடையே 70 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வரை தூரம்  உள்ளதால் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்வு எழுதுபவர்கள் தெரிவித்துள்ளனர்.



காலை 9.30மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம். 12.30 மணிக்கு முடிவடைகிறது. அதன் பிறகும் மாலை நடைபெறும் தேர்வு 1.30மணிக்கு தொடங்குவதால் 1 மணிநேரத்தில் தேர்வு மையத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் தேர்வு மையத்திற்கு அவசரஅசவரமாக செல்ல வேண்டி நிலை  ஏற்படும்.

இதனால்  மன ரீதியாக உளைச்சலுக்கு உள்ளாகும் நிலை உள்ளதாகவும், மேலும் பெண் தேர்வாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை இருப்பதால், ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.மேலும் இது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள உதவி எண்ணை தொடர்பு கொண்டால் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ரேசன் கடை மூலம் கருப்பட்டி விற்பனை- அரசின் உத்தரவுக்கு பனைத்தொழிலாளர் சங்கம் நன்றி!


இது தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி கூறுகையில்,  தனது மனைவி அரசு துறை ரீதியான பதவி உயர்வுக்கு வரும் 16ம்தேதி தேர்வு எழுத உள்ளதாகவும், நேற்கு ஹால்டிக்கெட் பெற்ற போது, காலையில் தூத்துக்குடியிலும், மாலை கோவில்பட்டியில் உள்ள தேர்வு மையத்திலும் தேர்வு எழுத தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.



மற்றவர்களிடம் விசாரித்த போது, அவர்களுக்கும் அவ்வாறு தான் ஹால்டிக்கெட் வந்துள்ளதாக கூறும் ஜெயபிரகாஷ் நாராயணசாமி,  ஒரு மணி நேரத்தில் 70 கிலோ மீட்டர் பயணித்து வேறு மையத்துக்கு செல்வது இயலாத காரியம் என்றும்  அரசு வழக்கம் போல ஒரே தேர்வு மையத்தில் இரு தேர்வுகளையும் எழுத அனுமதிக்க வேண்டும்என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 

மேலும் படிக்க: தென்னிந்தியாவின் ஜான்சிராணி என காந்தி போற்றிய தியாகி அஞ்சலை அம்மாள்: அரசின் நிதிக்கு ஏங்கி நிற்கும் குடும்பம்!


இப்பிரச்சினை தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதால்  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கமும் கோரிக்கை வைத்துள்ளர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: