தூத்துக்குடியில் ரவுடியை என்கவுண்டர் செய்த சம்பவத்தில் ரவுடியின் உடலை துளைத்துச்சென்ற தோட்டா உட்பட நான்கு துப்பாக்கி குண்டுகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கூட்டாம்புளி அடுத்துள்ள திருமலையா ரத்தைச் சேர்ந்த துரைமுருகன் மீது 7 கொலை வழக்குகள் உட்பட 35க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி பிற்பகலில் முத்தையாபுரம் கோவளம் கடற்கரை பகுதியில் பதுங்கியிருந்த துரைமுருகனை போலீசார் வளைத்துள்ளனர். அப்போது துரைமுருகன் போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்ப முயன்றுள்ளார்.
காவல் ஆய்வாளரை தாக்கிவிட்டு, துரைமுருகன் தப்பி ஓட முயன்றுள்ளார். இதன் காரணமாக தற்காப்புக்காக சப் இன்ஸ்பெக்டர் துரைமுருகனை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் கழுத்து, தலை உட்பட 3 இடங்களில் குண்டு பாய்ந்து துரைமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த என்கவுண்டர் சம்பவத்துக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்த மனித உரிமை அமைப்புகள், இதுசம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டதாகப் செய்திகள் வெளியாகின.
Also Read: காட்டு யானையின் மரணமும் தந்தம் கிடைத்த மர்மமும்.. மவுனம் சாதிக்கும் வனத்துறை
இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன், இது சம்பந்தமாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று ரவுடியை என்கவுண்டர் செய்த இடத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் ரவுடி உடம்பை துளைத்துவிட்டு வெளியே சென்ற 3 தோட்டக்கள் மற்றும் வானத்தை நோக்கி சுட்ட 1 தோட்டா உட்பட 4 துப்பாக்கி குண்டுகளை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: முரளி கணேஷ்( தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Criminal back ground, Criminal case, Death, Police encounter