Home /News /tamil-nadu /

திருச்செந்தூர் கடலில் தவறி விழுந்த நபரை காப்பாற்றிய கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் - பொதுமக்கள் பாராட்டு

திருச்செந்தூர் கடலில் தவறி விழுந்த நபரை காப்பாற்றிய கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் - பொதுமக்கள் பாராட்டு

கடலில் விழுந்த நபரை காப்பாற்றிய பணியாளர்கள்

கடலில் விழுந்த நபரை காப்பாற்றிய பணியாளர்கள்

Thiruchendrur Murugan Temple: இன்று காலையில் கடலில் நீராடிய நபர் ஆழமான பகுதியில் மூழ்கி உயிருக்கு போராடினர். இதனைக்கண்ட கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் கடலில் குதித்து அவரை மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர்.

    கடலில் தவறி விழுந்த நபரை காப்பாற்றிய கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களை திருச்செந்தூர் கோவில் அதிகாரிகளும் , காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    திருச்செந்தூரில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. முருகனின் இரண்டாம் படை வீடான இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடற்கரையை ஒட்டி இந்த கோவில் அமைந்துள்ளதால் கடலில் புனித நீராடி தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் கடலில் நீராடிய நபர் ஆழமான பகுதியில் மூழ்கி உயிருக்கு போராடினர். இதனைக்கண்ட கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் கடலில் குதித்து அவரை மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர். கரையில் முதலுதவி செய்த பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



    ஏற்கனவே கடந்த மாதம் கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடலில் நீராடும் போது ஆழமான பகுதிக்குச் சென்று மூழ்கி உயிரிழந்த நிலையில் அதனை அடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் 15 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் தினமும் பகலில் 10 பேரும் இரவில் 5 பேரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதியில் முகாமிட்டுள்ள அவர்கள் கடலில் ஒளிரும் மிதவையை மிதக்கவிட்டு அப்பகுதியை தாண்டி பக்தர்கள் பொதுமக்கள் செல்லாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படியுங்கள் :   திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: எடப்பாடி குற்றச்சாட்டு
     அதோடு கடலில் படகு ஒன்றினை நிறுத்தி அதிலிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதன் காரணமாக தண்ணீரில் மூழ்கிய நபர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். விசாரணையில் 35 வயது மதிக்கதக்க அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் மனநலம் சற்று பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. ஒரு உயிரை காப்பாற்றிய கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களை கோவில் அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Thiruchendur, Thoothukudi

    அடுத்த செய்தி