தந்தை அடிவாங்கியதை சிலர் கிண்டல் செய்ததால் நேர்ந்த விபரீதம்.. 3 ஆண்டுகள் கழித்து அடித்தவரை வெட்டி பழிதீர்த்த மகன்!

தந்தை அடிவாங்கியதை சிலர் கிண்டல் செய்ததால் நேர்ந்த விபரீதம்.. 3 ஆண்டுகள் கழித்து அடித்தவரை வெட்டி பழிதீர்த்த மகன்!

தந்தை அடிவாங்கியதை சிலர் கிண்டல் செய்ததால் நேர்ந்த விபரீதம்.. 3 ஆண்டுகள் கழித்து அடித்தவரை மகன் வெட்டி கொன்று பழிதீர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மேலப்பாண்டவர்மங்கலத்தில் நேற்று முன்தினம் கட்டிட தொழிலாளி கனகராஜ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கனகராஜ் வீட்டின் அருகில் வசிக்கும் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேல பாண்டவர்மங்கலம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த தாமோதர பாண்டியன் மகன் கனகராஜ்(40). கட்டிட தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி பூலம்மாள்(38) என்ற மனைவி மற்றும் ரவின்செல்வம்(6) என்ற மகனும் உள்ளார். சனிக்கிழமை இரவு கனகராஜ்,அவரது தாய் பார்வதி(60) மற்றும் மனைவி பூலம்மாள் ஆகியோர் வீட்டின் எதிரே உள்ள திண்ணையில் அமர்ந்து பேசி கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது கனகராஜ் வீட்டின் அருகே இருக்கும் பூலோகப்பாண்டியன் மகன் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பைக்கில் அந்த தெருவழியாக சென்றுள்ளார். கனகராஜ் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து தீடீரென பைக்கில் இருந்து பாலகிருஷ்ணன் இறங்கி தான் வைத்திருந்த அரிவாளைக்கொண்டு வயிறு மற்றும் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளனர்.

Also read: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் வெறிச்செயல்.. காப்பாற்ற சென்ற உறவினர் லாரியில் சிக்கி உயிரிழப்பு!

இதனால் அதிர்ச்சியடைந்த கனகராஜ் தாய் பார்வதி தடுக்க முயல அவரது கையிலும் வெட்டு விழுந்துள்ளது. இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் வரவே பாலகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் பைக்கில் தப்பியோடியுள்ளார். இதில், சம்பவ இடத்தில் கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பார்வதி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கனகராஜ் உயரிழந்ததை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் பாலகிருஷ்ணன் வீட்டையும் அடித்து நெறுக்கினர். இது குறித்து தகவல் கிடைத்தும் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார், கோவில்பட்டி டி.எஸ்.பி.உதயசூரியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் உடலைகைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், கொலை செய்யப்பட்ட கனகராஜ் மனைவிக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வலியுறுத்தி கனகராஜ் உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையெடுத்து கோவில்பட்டி தாசில்தார் அமுதா, டி.எஸ்.பி. உதயசூரியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தினை கைவிட்டு உடலை பெற்று சென்றனர்.

இந்நிலையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமயிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இக்கொலை சம்பவம் தொடர்பாக மேலப்பாண்டவர்மங்கலத்தினை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25). அவரது நண்பர்கள் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (25), சாஸ்திரி நகரைச் சேர்;ந்த மகேந்திரன்(21), சிவபெருமாள்(25), சரவணக்குமார் (21) ஆகிய  5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து அரிவாள், 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணணின் தந்தை பூலோகப்பாண்டியன், கனகராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பூலோகப்பாண்டியனை கனகராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையெடுத்து இரு குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை பாலகிருஷ்ணன் அங்குள்ள கோவில் அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்த போது, அக்கிராமத்தினை சேர்ந்த சிலருக்கும், பாலகிருஷ்ணனுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் சிலர் உன் தந்தை அடிவாங்கி மாதிரி நீ அடி வாங்க போறியா என்று கிண்டல் செய்துள்ளனர். இதனால் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை ஏற்பாடு அப்பகுதியில் இருந்த பெரியவர்கள் சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையெடுத்து பாலகிருஷ்ணன் தனது நண்பர்களுடன் பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜ் வீட்டின் அருகே திண்ணையில் அமர்ந்து பேசி கொண்டு இருப்பதை பார்த்துள்ளனர். தனது தந்தையை கனகராஜ் அடித்த காரணத்தினால் தான் அவமானப்படுவதாக ஆத்திரமடைந்து அரிவாளை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு நண்பர்களுடன் பைக்கில் வெளியே கிளம்பி உள்ளார். அப்போது கனராஜ் பேசி கொண்டு இருக்கும் பகுதிக்கு அருகே சென்றது அரிவாளை கொண்டு வெட்டி விட்டு தப்பியோடியதாக போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு ஏற்பட்ட சிறு பிரச்சினையில் தனது தந்தை அடிவாங்கியதை மற்றவர்கள் கிண்டல் செய்த காரணத்தினால் ஆத்திரமடைந்த மகன், 3 ஆண்டுகள் கழித்து தந்தையை அடித்தவரை மகன் வெட்டிபடுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Esakki Raja
First published: