Home /News /tamil-nadu /

எட்டயபுரம் ஆட்டுச் சந்தை முன்னறிவிப்பின்றி மூடல் - சாலையிலேயே வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்!

எட்டயபுரம் ஆட்டுச் சந்தை முன்னறிவிப்பின்றி மூடல் - சாலையிலேயே வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்!

எட்டயபுரம் ஆட்டுச் சந்தை

எட்டயபுரம் ஆட்டுச் சந்தை

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திடீரென பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் ஆட்டு சந்தை நடத்துவதற்கு தடை விதித்ததால் வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் ஏமாற்றம் அடைந்தனர்.

  • News18
  • Last Updated :
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக எட்டயபுரம் ஆட்டுச் சந்தை திடீரென மூடப்பட்டதால் வியாபாரிகள் அவதியடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்களும், வியாபாரிகளும் வருவதால் சந்தை களைகட்டி காணப்படுவது வழக்கம்.

குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட திருவிழாக் காலங்களில் 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்று எட்டையாபுரம் ஆட்டுச் சந்தைக்கு ஏராளமான வியாபாரிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் வந்திருந்தனர். 10,000 மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

Also read... கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்!

ஆனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திடீரென பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் ஆட்டு சந்தை நடத்துவதற்கு தடை விதித்ததால் வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் ஏமாற்றம் அடைந்தனர்.

Also read... சென்னையில் நாளை குறைந்த அளவில் மட்டும் மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே!

இருப்பினும் அப்பகுதியில் சாலையில் வைத்தே தங்களது ஆடுகளை விற்பனை செய்தனர். பெரும்பாலானோர் தனிமனித இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் இருந்ததால் தொற்று பரவும் அச்சம் எழுந்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Tuticorin

அடுத்த செய்தி