Home /News /tamil-nadu /

சொந்த நிலத்தில் முன் அனுமதி பெறாமல் சரள் மண் எடுத்த விவசாயி... அதிகாரிகள் கேள்வி கேட்டதால் சாலை மறியல்

சொந்த நிலத்தில் முன் அனுமதி பெறாமல் சரள் மண் எடுத்த விவசாயி... அதிகாரிகள் கேள்வி கேட்டதால் சாலை மறியல்

விவசாயிகள்  சாலை மறியல்

விவசாயிகள் சாலை மறியல்

TN Farmers | தங்களுக்கு சொந்த நிலத்தில் கூட மண் எடுக்க அனுமதி இல்லையா என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் திருமலாபுரத்தில் ராமசாமி என்பவர் தனது விவசாய நிலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை மூடுவதற்காக அவரது நிலத்தில் சரள் மண் எடுத்து குவித்து வைத்து இருந்த நிலையில், முன் அனுமதி பெறமால் சரள் மண் எடுத்ததாக கூறி கனிமவளத்துறை புகாரின் பெயரில் 3 பேரை கயத்தார் போலீசார் கைது செய்து, ஒரு ஜேசிபி மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திருமலாபுரம் - கடம்பூர் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் திருமலாபுரம் கிராமத்தினை சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஓய்வு பெற்ற அரசு வழக்கறிஞர். திருமலாபுரத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலை அருகே ராமசாமிக்கு கிணறுவுடன் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. சாலையின் அருகே கிணறு இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இதையெடுத்து கிணற்றினை மூடவும், பல ஆண்டுகளாக சீர்படுத்தமால் இருந்த நிலத்தினை சீர்படுத்தி விவசாய பணிகள் தொடங்குவதற்கு முடிவு செய்த ராமசாமி, ஜேசிபி இயந்திரத்தினை கொண்டு நிலத்தினை சீர்படுத்தும் பணியை தொடங்கியுள்ளார்.

மேலும் அதில் உள்ள சரள் மண்ணை கொண்டு கிணற்றினை மூடி விட முடிவு செய்து இருந்தாக தெரிகிறது. இதற்காக நிலத்தில் இருந்து மண் எடுத்து அதனை அருகில் குவித்து வைத்துள்ளார். இந்நிலையில் முறையாக அனுமதி பெறமால் நிலத்தில் சரள் மண் எடுத்து குவித்து வைத்துள்ளதாக  மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) சுகதா ரஹிமா கொடுத்த புகாரில் கயத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலாபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் ராமசுப்பு (44) சங்கரப்பன் மகன் கோபாலகிருஷ்ணன் (49) மற்றும் அகிலாண்டபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் வெள்ளத்துரை (38) ஆகியோரை கைது செய்து ஜேசிபி மற்றும் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புகாரை ரத்து செய்ய வேண்டும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும், பறிமுதல் செய்த வாகனங்களை திரும்ப தர வலியுறுத்தி திருமலாபுரம் - கடம்பூர் சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : 'பாஜகவின் ஏஜண்டாக செயல்படுகிறார்' - தமிழக ஆளுநர் மீது கி.வீரமணி காட்டம்

இதனை தொடர்ந்து கயத்தார் தாசில்தார் சுப்புலெட்சுமி மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதியளித்தை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதுகுறித்து தங்களுக்கு சொந்த நிலத்தில் கூட மண் எடுக்க அனுமதி இல்லையா என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளிவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Farmers Protest, Tuticorin

அடுத்த செய்தி