தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மது அருந்த சைடிஸ்சாக ஆட்டுக்குடல் வாங்கி தராததால் நண்பன் என்றும் பாராமல் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த கூலி தொழிலாளியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சைநகரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த அருமைக்கொடி (58) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (54) என்பவரும் நண்பர்கள் ஆவர். கடந்த 2ம் தேதியன்று இருவரும் புதுக்குளத்தில் காலியாக உள்ள இடத்தில் மது அருந்தி இருக்கின்றனர். மதுபோதையில் இருந்த அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த செல்வராஜ் மகன் தாவீது (24) மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து அருமைக்கொடியை துண்டால் கழுத்தை இறுக்கியும் மற்றும் கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கியிருந்து தப்பியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து தகவலறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருமைக்கொடி உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தனிப்படை அமைத்து தப்பியோடிய இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் செல்வராஜ் மற்றும் அவரது மகன் தாவீது ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிக்க: நடிகர் சூர்யாவை கண்டித்து பாஜக இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
எதற்காக கொலை செய்தீர்கள் என போலீசார் கேட்டதற்கு அவர்கள் அளித்த வாக்குமூலம், போலீசாரையே வியப்படைய செய்தது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், செல்வராஜ் அருமைக்கொடியுடன் ஒன்றாக கூலி வேலைக்கு செய்து வந்துள்ளார். சம்பவ நாளன்று செல்வராஜை மரு அருந்தலாம் என்று அருமைக்கொடி அழைத்துள்ளார். ஆட்டுக்குடல் கறியை சைட் டிஷாக வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தரிசனம் மட்டுமே, உட்கார அனுமதியில்லை: பக்தர்களுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம்!
இதை தொடர்ந்து நண்பர்கள் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, செல்வராஜ், ஆட்டுக்குடல் கேட்டப்போது, வாங்கி தரமுடியாது என்று தெரிவித்த அருமைக்கொடி, செல்வராஜை அவதூறாக பேசியுள்ளார். அப்போது அங்கு வந்த தனது மகன் தாவீதுடன் சேர்ந்து அருமைக்கொடியை செல்வராஜ் கொலை செய்துள்ளார். இதையடுத்து தாவீது, செல்வராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: முரளி கணேஷ், தூத்துக்குடி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.