Home /News /tamil-nadu /

தூத்துக்குடியில் மாமாவுக்கு திதி கொடுப்பதில் தகராறு - அத்தையைக் குத்திக் கொன்ற இளைஞர் கைது

தூத்துக்குடியில் மாமாவுக்கு திதி கொடுப்பதில் தகராறு - அத்தையைக் குத்திக் கொன்ற இளைஞர் கைது

கொலைசெய்யப்பட்ட பெண்மணி

கொலைசெய்யப்பட்ட பெண்மணி

தூத்துக்குடியில் மாமாவுக்கு முதலாம் ஆண்டு திதி கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் அத்தையை குத்திக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தூத்துக்குடியில் மாமாவுக்கு முதலாம் ஆண்டு திதி கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் அத்தையை குத்திக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பிள்ளையார் பெரியவன் திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வ முருகன். இவர் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக வேலை பார்த்து வந்தார். குடும்பத்தகராறு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு செல்வ முருகனின் மனைவி அருணா தனது குழந்தையுடன் உடன்குடியில் வசித்து வந்தார்.

செல்வம் முருகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில் இவரின் அக்கா மகன் முத்துக்குமார் மாமாவின் நினைவு தினத்தை திதி செலுத்தி அனுசரிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

இதற்கு அருணா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாகவே மகன்களை வைத்து திதி கொடுத்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் அத்தை அருணாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் அருணா  பரிதாபமாக உயிர் இழந்தார். பின்னர் முத்துக்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திதி கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட முத்துக்குமாரிடமிருந்து அருணாவின் 11 பவுன் தங்க நகையும் கைப்பற்றப்பட்டது.
Published by:Karthick S
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Thoothukudi

அடுத்த செய்தி