• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரு கிலோ அவரைக்காய் ரூ.300: ஊரடங்கு காரணமாக காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

ஒரு கிலோ அவரைக்காய் ரூ.300: ஊரடங்கு காரணமாக காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

காய்கறி வாங்க குவிந்த கூட்டம்

காய்கறி வாங்க குவிந்த கூட்டம்

1கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அவரைக்காய் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடும் விலை உயர்வினால் பொது மக்கள் மிகுந்த வேதனையுடன் காய்கறிகளை வாங்கி சென்றனர்

  • Share this:
ஊராடங்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒருகிலோ அவரைக்காய் ரூ.300க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில், மேலும் ஒரு வார காலத்துக்கு அதனை தமிழக அரசு நீட்டித்துள்ளது.  தற்போதைய ஊரடங்கின்போது,  மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் போன்றவையும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நேற்றும் இன்றும் இரவு 9 மணிவரை கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில்,  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கூடுதல் பஸ் நிலையம் மற்றும் உ.வ.சி அரசு மேல்நிலைபள்ளியில் செயல்படடு வரும் நகராட்சி தினசரி சந்தையில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிலும் கூடுதல் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் தினசரி சந்தையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த காரணத்தினால் தினசரி சந்தை திணறும் நிலை ஏற்பட்டது.

மேலும் கடந்த சில தினங்களாக இருந்த விலையை விட 3 மடங்கு விலை உயர்த்தி காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று வரை கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இது போன்று வெங்காயம், கத்தரிக்காய், கேரட், முட்டைக்கோஸ் என எல்லா காய்களின் விலையும் 3 மடங்கு விலை உயர்ந்து காணப்பட்டது.

நேற்று வரை 1கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அவரைக்காய் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடும் விலை உயர்வினால் பொது மக்கள் மிகுந்த வேதனையுடன் காய்கறிகளை வாங்கி சென்றனர். அரசு கொடுத்த 2 ஆயிர ரூபாய் காய்கறிக்கு மட்டுமே சரியாக போய்விட்டது என்றும் புலம்பியபடி அவர்கள் சென்றனர்.

மேலும் படிக்க...  ஊழியர்களிடம் போலீசார் கடுமை: ஹைதராபாத்தில் சேவையை நிறுத்திய ஜொமாட்டோ, ஸ்விகி..

இதற்கிடையில் கூடுதல் பஸ் நிலையத்தில் உள்ள தினசரி சந்தைக்கு காய்கறி வாங்க வந்த நாலாட்டின்புதூரைச் சேர்ந்த சிறு வியாபாரி ரெங்கராஜ் என்பவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: