Home /News /tamil-nadu /

கோவில்பட்டியில் தேங்காய் வெடலை போட்டு த.மா.காவினர் நூதன போராட்டம்

கோவில்பட்டியில் தேங்காய் வெடலை போட்டு த.மா.காவினர் நூதன போராட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நூதன போராட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நூதன போராட்டம்

Kovilpatti : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தேங்காயில் சூடம் ஏற்றி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சுற்றியவாறு தேங்காய் வெடலை போட்டனர்.

தூத்துக்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது ‌ இதற்கு போலீசார் தடை விதித்ததால் தேங்காய் வெடலை போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் உட்கோட்டத்தில், கோவில்பட்டி மேற்கு, கிழக்கு, அனைத்து மகளிர், நாலாட்டின்புதூர், கழுகுமலை, கயத்தாறு, கொப்பம்பட்டி ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இதில், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தின் எல்லை பரந்து விரிந்ததாகும்.

இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட  கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி, சிதம்பராபுரம், பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி, விஸ்வநாததாஸ் நகர் ஆகியவை நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் இருந்து  இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன.

Also Read: 30 வருஷமா இங்க இருக்கோம் எங்க போறது.. ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

இந்த கிராமப்புற பகுதிகளில் ஒரு பிரச்சினை என்றால், நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில்  இருந்துதான் போலீசார் செல்ல வேண்டும். இதற்கு சுமார் 40 நிமிடங்கள் வரை ஆகும்.
அதே போல், புகார் அளிக்க அங்குள்ள மக்கள் கோவில்பட்டியை கடந்து தான் நாலாட்டின்புதூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயண நேரம், பணம் விரயம் ஏற்படுகிறது. இதனால் போலீசாரும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

எனவே, ஆங்கிலேயர்கள் காலத்தில் வரையறுக்கப்பட்ட காவல் நிலைய எல்லைகளை மாற்றி அமைக்க வேண்டும். கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி, சிதம்பராபுரம், பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி, விஸ்வநாததாஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராம மக்கள் பயன்பெறும் விதமாக, கடலையூரை தலைமையிடமாக கொண்டு தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும் அல்லது நாலாட்டின்புதூர் காவல் எல்லையை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

Also Read: தேனி மருத்துவமனையில் சினிமா பாடலுக்கு ஆட்டம் போட்ட டூட்டி நர்ஸ் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இதற்கு போலீசார் அனுமதி மறுத்து நிலையில்  அதன் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பூவனநாத சுவாமி திருக்கோவில் முன்பு 73 தேங்காய் வெடலை போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தேங்காயில் சூடம் ஏற்றி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சுற்றியவாறு தேங்காய் வெடலை போட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Ramprasath H
First published:

Tags: Police station, Protest, Thoothukudi, TMC

அடுத்த செய்தி