Home /News /tamil-nadu /

பிரபல ரவுடி பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்ட போலீஸ் எஸ்.ஐ.. கேக் ஊட்டி வரவேற்பு - மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை

பிரபல ரவுடி பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்ட போலீஸ் எஸ்.ஐ.. கேக் ஊட்டி வரவேற்பு - மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி சம்பவம்

தூத்துக்குடி சம்பவம்

Thoothukudi தூத்துக்குடி - ஸ்ரீவைகுண்டத்தில் பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போலீஸ் எஸ்ஐ மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம். மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை.

    ஸ்ரீவைகுண்டத்தில் பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போலீஸ் எஸ்ஐ மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம். மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்தவர் வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது பிறந்தநாள் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அவரது நண்பர்கள் மற்றும் சகாக்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

    இந்த பிறந்தநாளை கொண்டாடிய தினத்தன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் மாவட்ட எஸ்பியின் நேரடி கண்காணிப்பில் உள்ள தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணி ஆகியோர் பல்வேறு குற்ற பின்னணி உள்ள வைகுண்ட பாண்டியனின் (எ) வைகுண்டம் பிறந்த நாள் அன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்றுள்ளனர்.

    Also Read:  திமுக கவுன்சிலரின் தந்தை அடித்துக்கொலை.. பணம் கொள்ளை... கும்பகோணத்தில் பரபரப்பு

    அப்போது உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணி ஆகியோரை வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம் சால்வை அணிவித்து கேக் ஊட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த 26.03.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வைத்து ஒருவரை அரிவாள் பிடியால் தாக்கியதாக கூறி ஸ்ரீவைகுண்டம் போலீசார் வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டத்தை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு குற்றங்கள் நிலுவையில் உள்ள காரணத்தினால் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவுப்படி இவரை நேற்றைய தினம் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    Also Read:  கள்ளக்காதல்: உப்புமாவில் விஷம் கலந்து ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்.. கன்னியாகுமரியில் கொடூரம்

    இந்த நிலையில் பல்வேறு குற்றப்பின்னணி உடைய பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் காவல்துறை அதிகாரி மற்றும் தனிப்பிரிவு காவலர் கலந்து கொண்டது ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது.இந்த நிலையில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணியன் ஆகிய இருவரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் இன்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

    செய்தியாளர்: முரளி கணேஷ் (தூத்துக்குடி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Police SI, Tamil News, Thoothukudi, Tuticorin

    அடுத்த செய்தி