தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அதில் வேதாந்த நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல தமிழக அரசு இந்த ஆலையை கையகப்படுத்தி
ஆக்சிஜன் உற்பத்தையைத் தொடங்குவதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக
அனைத்து கட்சிக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆளும் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்கட்சிகள், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். அத்துடன், உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
Must Read : ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு..
இந்நிலையில், தூத்துக்குடி மக்கள்
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.