கோவில்பட்டியில் 100% பணியாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி தொடங்கியது!

தீப்பெட்டி உற்பத்தி

கொரோனா ஊரடங்கு காரணமாக 40 நாள்கள் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்ட  நிலையில் கடந்த 2ந்தேதி 50 சதவீத பணியாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கியது. இந்நிலையில் இன்று முதல் 100சதவீத பணியாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தமிழக அரசின் ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து இன்று முதல் 100 சதவீத பணியாளர்களுடன் தீப்பெட்டி உற்பத்தி தொடங்கியுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விருதுநகர், தென்காசி, நெல்லை, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், அதன் சார்பு தொழிற்சாலைகள் 2000 என 2300 தொழிற்சாலைகள் தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றன.  இத்தொழிலை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டால் இருதரப்புக்கு இடையே மோதல்: வாலிபர் மண்டை உடைப்பு!


கொரோனா ஊரடங்கு காரணமாக 40 நாள்கள் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்ட  நிலையில் கடந்த 2ந்தேதி 50 சதவீத பணியாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கியது. இந்நிலையில் இன்று முதல் 100சதவீத பணியாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.இதையடுத்து  தமிழகம் முழுவதும் உள்ள தீப்பெட்டி ஆலைகள் 100சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் ஒருபகுதியாக கோவில்பட்டி பகுதியில் இன்று 100 சதவீதம் பணியாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கியுள்ளன. முககவசம் அணிந்த பணியாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளி விட்டு பணியாளர்கள் வேலை பார்க்கும் வகையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் படிக்க: பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்கினாலும், பெற்றோர்கள் புகார் அளிப்பதில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்


இது குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர் கருப்பசாமி  கூறுகையில், கடந்த 2ம் தேதி 50 சதவீத பணியாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகள் அரசு விதித்த விதிமுறைகளுடன் செயல்பட்டு வந்த நிலையில், இன்று 100 சதவீத பணியாளர்களுடன் தீப்பெட்டி உற்பத்தி தொடங்கியுள்ளதாகவும்,  கொரோனா விதிகளை தொழிலாளர்கள் முழுமையாக பணியாற்றி வருவதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளது மட்டுமின்றி, சமூக இடைவெளியுடன் பணியாற்றி வருவதாகவும், தொடக்கத்தில் தீப்பெட்டி மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இருந்த நிலையில், தற்போது மூலப் பொருள்கள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் 100 சதவீத பணியாளர்களும் வேலைக்கு வந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி அதிகரிக்கும் ” என்றார்.
Published by:Murugesh M
First published: