முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 3ஆம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களுக்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் அஞ்சலி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 3ஆம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களுக்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் அஞ்சலி!

3ஆம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

3ஆம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறும் நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் உயிரிழந்த 13 பேரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு பலியானவர்களில் 13 பேரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் பகுதி செயலாளர்கள் நிர்மல் ராஜ் ஜெயகுமார் மேகநாதன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு 13 பேரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட முடி திருத்துவோர் சங்கத்தை சேர்ந்த சுமார் 600 பேருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்பி, ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளார். பதவியேற்ற இரண்டு வாரத்தில் இந்த நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டுள்ளது எனவும் என்று அவர் கூறினார்.

செய்தியாளர்  - முரளி கணேஷ்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Thoothukudi Sterlite, Tuticorin, Tuticorin gun shot