Home /News /tamil-nadu /

சண்டாவாக மாறிய அண்டா சாமியார்.. கெட்டப் மன்னன் லீலைகள் அம்பலம்..

சண்டாவாக மாறிய அண்டா சாமியார்.. கெட்டப் மன்னன் லீலைகள் அம்பலம்..

அண்டா சாமியார் முனீஸ்வரன்

அண்டா சாமியார் முனீஸ்வரன்

போலி சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான பல லீலைகள் அம்பலமாகியுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
    துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கைதான அண்டா சாமியாரின் லீலைகள் ஒவ்வொன்றாக அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 6 ஆண்டுகளுக்கு முன்பே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் பலர் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்டா சாமியார் செய்த லீலைகள் என்ன?

    சங்கு ஊதி பூஜை செய்வது போல் நடித்து வந்த சக்தி என்ற முனீஸ்வரன், பெண்கள், ஆண்கள் மட்டுமின்றி காவலர்களையும் ஏமாற்றியுள்ளார். ஆனால் காவல்துறை இவருக்கு உடந்தையாக இருந்தது ஏன்? உடந்தையாக செயல்பட்ட காவலர்கள் தண்டிக்கப்படுவார்களா என கேள்வி எழுந்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்தவர் 37 வயதான சக்தி என்ற முனீஸ்வரன். விளாத்திக்குளம் - நாகலாபுரம் சாலையில் 'சக்தி வாராகி" என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்துள்ளார். அடிப்படையில் புகைப்படக் கலைஞரான சக்தியின் உண்மையான பெயர் முனிஸ்வரன். இவருக்கு சக்திமான் சீரியல் பிடிக்கும் என்பதால் தன் பெயரையும் சக்தி என மாற்றிக் கொண்டுள்ளார் பணம், நகை வாங்கி ஏமாற்றி விட்டதாக ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் இந்தப் போலி சாமியார்அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான பல லீலைகள் அம்பலமாகியுள்ளது.

    Also Read:  இது என்ன கொடுமை.. காதலியின் காதில் உடலுறவு கொண்ட காதலன் – படுகாயத்துடன் பேஸ்புக்கில் பதிவு போட்ட இளம்பெண்

    உள்ளூரில் சக்தி டிவி என்ற பெயரில் கேபிள் தொலைக்காட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளார் போலி சாமியார். விளாத்திகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், தனது தொழிலில் பங்குதாரராக சேரும்படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தனது டிவியில் பணியாற்றும்படியும், அதற்கு மாத சம்பளம் மற்றும் மாதம் தோறும் 25 ஆயிரம் ரூபாய் தருவதாக ஆசை காட்டியுள்ளார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரது ஒப்புதலின் பேரில் அந்தப் பெண்ணிடம் இருந்து, ஒன்றே கால் லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.

    போலி சாமியார்


    மேலும் பல வேலைகளுக்குப் பணம் தேவைப்படுவதாகக் கூறி அந்த தம்பதியிடம் இருந்து மொத்தம் 3 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார் போலி சாமியார். ஒரு கட்டத்தில் பணத்தைத் திருப்பித் தராததால், அந்த தம்பதி பணத்தை தரும்படி கேட்டபோது, அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்கத்தி முனையில், தன்னுடன் வரும்படியும் பெயரைக் கெடுத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார் போலி சாமியார் சக்தி

    கத்தி வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு..

    இதுகுறித்து விளாத்திகுளம் போலீசாரிடம் பாதிக்கப்பட்ட தம்பதி புகார் அளித்தனர். ஆனால் போலீசார் போலி சாமியாருக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தம்பதி குற்றச்சாட்டு கூறியுள்ளனர். மேலும் அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இவரைப் போல மேலும் 2 பெண்களை சக்தி ஏமாற்றியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Also Read:  சின்ன பாம்பு என நினைத்து வாலை பிடித்த நபர்... ஆள் உயரத்திற்கு வெளியே வந்த ராஜநாகம் - ஷாக்கிங் வீடியோ

    விளாத்திகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 80 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார் சக்தி. பேக்கரி கடையில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவரிடம், அவர் விரும்பும் பெண்ணை காதல் வலையில் விழ வைக்க சிறப்பு பூஜை செய்து தருகிறேன் என்று கூறி 65 ஆயிரம் ரூபாய் பறித்துள்ளார்.

    போலி சாமியார்


    சபல புத்தி ஆண்களை குறிவைத்து பணம் கறந்த சக்தி

    ஒருதலைக் காதலில் தவிக்கும் இளைஞர்கள், அடுத்தவர் மனைவியை தனது வலையில் விழ வைக்கும் சபல புத்தி ஆண்கள் ஆகியோரைக் குறிவைத்து பணம் கறந்துள்ளார் சக்தி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதுசாதாரண மக்கள் மட்டுமின்றி, காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவரும் தனது குடும்பப் பிரச்னைக்காக சக்தியை நாடி, 50 ஆயிரம் ரூபாய் வரை இழந்துள்ளார்.



    வீடியோவை காட்டி மிரட்டல்

    வாடிக்கையாளர்கள் தனது வீட்டிற்கு வந்து குறிகேட்கும்போது அதை ரகசியமாக ஒரு கேமராவில் பதிவு செய்து கொள்வது சக்தியின் வழக்கம். ஒரு கட்டத்தில் பணத்தைக் கேட்டு வாடிக்கையாளர்கள் நெருக்கடி கொடுத்தால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் எனக் கூறி மிரட்டி அடக்கியுள்ளார்.காவலரின் குடும்பப் பிரச்னையில் அவர் தன்னிடம் பேசிய ஆடியோவை வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார் சக்தி.

    சட்டமன்ற தேர்தலில் விருப்பமனு

    இதற்கிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது , விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட, அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகளில் சக்தி விருப்ப மனு அளித்துள்ளார் என்றும் போலீசார் கூறுகின்றனர். சக்தியிடம் பணம் கொடுத்து ஏமாந்து போனவர்கள் பலரும் பெண் தொடர்பான பிரச்னைகளில் சிக்கியவர்கள் என்பதால் அவர்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதை காவல்துறையிடம் எடுத்துச் செல்ல முடியவில்லை. அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சக்தி, மேலும் மேலும் பணம் பறித்து வந்துள்ளார்.

    போலி சாமியார்


    6 ஆண்டுகளுக்கு முன்பே, விளாத்திகுளத்தைச் சேர்ந்த தம்பதி புகார் அளித்தபோது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். தற்போது போலீசார் நடத்தி வரும் தீவிர விசாரணையில் அடுத்து என்னென்ன லீலைகள் அம்பலமாகப் போகிறதோ என விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Fraud, Money, News On Instagram, Police, Thoothukudi, Video

    அடுத்த செய்தி