Home /News /tamil-nadu /

குலசை முத்தாரம்மன் சூரசம்ஹாரம்: பக்தா்களுக்கு அனுமதி இல்லை- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

குலசை முத்தாரம்மன் சூரசம்ஹாரம்: பக்தா்களுக்கு அனுமதி இல்லை- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் 31-ம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்துவருகிறது. எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவித்து முதல்வர் ஒரு சில தளர்வுகள் அறிவித்துள்ளார்.

    அதன்படி, திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, குலசேகரப்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் நாளை நடைபெறவிருக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    மேற்படி நிகழ்வுகளை பக்தர்கள் யூட்யூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொள்ளலாம். 16-ம் தேதி முதல் பக்தர்கள் திருக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை தவறாது கடைபிடிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Thoothukudi

    அடுத்த செய்தி