• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரூ.3 லட்சத்துக்கு ஆண் குழந்தை விற்பனை: தாய் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

ரூ.3 லட்சத்துக்கு ஆண் குழந்தை விற்பனை: தாய் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

குழந்தை விற்பனை

குழந்தை விற்பனை

குழந்தை குறித்து ஜெபமலரிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. இதற்கிடையே, ஜெபமலர் தனது குழந்தையை புரோக்கர் மூலம் விற்பனை செய்து விட்டதாக மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது.

  • Share this:
    தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக தாய் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிகண்டன் (38). இவருக்கும், தூத்துக்குடி கொத்தனார் காலனியை சேர்ந்த ஜெபமலர் (28) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம். கடந்த ஜனவரி 11ஆம் தேதி  ஜெபமலருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இதற்கிடையே  கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி பிரிந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தலில் வாக்களிக்க தூத்துக்குடிக்கு வந்த  ஜெபமலர் தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தூத்துக்குடியிலே  இருந்துவிட்டார்.
    கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் தனது மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தார். ஆனால், வீட்டில் குழந்தை இல்லை. ஜெபமலரிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. இதற்கிடையே, ஜெபமலர் தனது குழந்தையை புரோக்கர் மூலம் விற்பனை செய்து விட்டதாக மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் படிக்க: ஷோரூம்களில் கைவரிசை காட்டிய நிர்வாண திருடன்.. சிக்கவைத்த சிசிடிவி காட்சிகள்


    இதுகுறித்து அவர் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
    அதில், ஜெபமலர், தனது குழந்தையை விருதுநகரைச் சேர்ந்த புரோக்கர் ஜேசுதாஸ் என்பவர் மூலம் தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல் ஆகியோருடன் சேர்ந்து ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்து விட்டதாகவும், எனது குழந்தையை மீட்டுத்தரக் கோரியும் தெரிவித்து இருந்தார்.

    இதையும் படிங்க: தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன்: லிப்ட் கேட்டு வந்தபோது சிக்கினான்!


    அதன்பேரில்,  தூத்துக்குடி சிப்காட் போலீசார், குழந்தையின் தாய் ஜெபமலர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செய்தியாளர்: முரளி கணேஷ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: