• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டெர்லைட்: ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

ஸ்டெர்லைட்: ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

போராட்டம்

போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை 31 ஆம் தேதியோடு நிறுத்த வேண்டும் என்றும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது என்றும் கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்ப்பு குழுவினர் போராட்டம் நடத்தினர்.

  • Share this:
    ஸ்டெர்லைட்  ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான காலக்கெடுவை நீட்டிக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது.  இந்த நேரத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருகிறோம் என்று நீதிமன்றத்தில்  வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதில் ஏப்ரல் மாத கடைசி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நீதிமன்றம் அளித்த காலக்கெடு இந்த மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் கொரோனா மூன்றாவது அலையை காரணம் காட்டி ஸ்டெர்லைட்  ஆலையில் தொடர்ந்து ஆக்ஸிஜன்  உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

    மேலும் படிக்க: பொறியியல், கலைக் கல்லூரிகளுக்கு வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு!


    இந்த நிலையில்  ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  இன்று போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை 31 ஆம் தேதியோடு நிறுத்த வேண்டும் என்றும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.  எக்காரணம் கொண்டும் ஜூலை 31-க்கு பிறகு ஸ்டெர்லைட் இயங்க அனுமதிக்க கூடாது, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    மேலும் படிக்க: திமுக ஐ.டி.விங்கில் மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு?


    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நிர்வாகிகள் சிலர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை மனு அளித்தனர். இந்த போராட்டத்தை யொட்டி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    செய்தியாளர்: முரளி கணேஷ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: