தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையக்கப்படுத்தும் பணி நடக்கிறது: கனிமொழி தகவல்

கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் தொடங்கும் என்று கனிமொழி தெரிவித்தார்.

 • Share this:
  தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

  தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்ட நிலையில்,  புதிதாக பள்ளி கட்டிடங்கள் கட்டித் தரவேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் நாடாளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம்  கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியை கொண்டு இந்த பள்ளி கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கையை  கனிமொழிமேற்கொண்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இதை தொடர்ந்து  நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  இதையும் படிங்க: நிர்வாக வசதிக்காக கொங்குநாடு அமைவதில் தவறில்லை:  பெஸ்ட் ராமசாமி பேச்சு!


  இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்பி, ‘ தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் தொடங்கும் என்று நம்புகிறோம். டெல்லி செல்லும் போது இதை நான் வலியுறுத்துவேன். முதலில் நிலம் வாங்கி கொடுத்த பிறகு தான் அவா்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் செய்ய முடியும் அதற்கான வேலைகள் நடந்து கொண்டே இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

  மேலும் படிக்க: மேகதாது அணை: தமிழக அரசுக்கு  ஒத்துழைப்பதாக அனைத்துக் கட்சிகளும் உறுதி!


  செய்தியாளர்: முரளிகணேஷ், தூத்துக்குடி
  Published by:Murugesh M
  First published: