போதிய வசதிகள் இல்லை என கோவில்பட்டி அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது பொதுமக்கள் புகார்

கோப்புப் படம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் போதிய வசதிகள் இல்லை எனவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் சிகிச்சை பெற்று வரும் தொற்றாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா வார்டுகளில் 153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் தொற்றாளர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்க நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதாகவும், தொற்றாளர்களுக்கு கிழிந்த நிலையில் உள்ள படுக்கைகள், தரமற்ற உணவு, சுத்தம் செய்யப்படாத கழிவறைகள் என எந்த அடிப்படை வசதிகளும் முறையாக வழங்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசனிடம் கேட்டபோது, குற்றச்சாட்டை முன்வைக்கும் நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அவர் தனக்கு சர்க்கரை நோய் இருப்பது குறித்து மாறி மாறி தகவல் கூறியதால் அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தற்போது தான் நிதி வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இனி வரும் நாட்களில் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உணவு பட்டியல் படி தரமான உணவு வழங்கப்படும் எனவும் கமலவாசன் கூறினார்.

மேலும் படிக்க...  கொரோனா பாதிக்கப்பட்ட சென்னை உளவுப்பிரிவு தலைமைக் காவலர் மரணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 300-க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படும் நிலையில், அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டுகளில் மாவட்ட நிர்வாகம் கவனித்து, தொற்றாளர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: