Home /News /tamil-nadu /

5 பிள்ளைய பெத்து என்ன?.. இடிந்துபோன வீட்டில் வாழ்க்கையை கழிக்கும் மூதாட்டியின் கண்ணீர் கதை

5 பிள்ளைய பெத்து என்ன?.. இடிந்துபோன வீட்டில் வாழ்க்கையை கழிக்கும் மூதாட்டியின் கண்ணீர் கதை

தூத்துக்குடி

தூத்துக்குடி

பிள்ளைகள் ஆதரவும் இல்லாமல் தனது உழைப்பினை நம்பி மட்டு வாழ்ந்து வரும் 62வயதான மூதாட்டி மாவட்ட நிர்வாகம் தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
சாகுற நாள் தெரிந்து விட்டால் வாழுற நாள் நரகமாகிவிடும் என்ற வசனத்தினை நடிகர் ரஜினிகாந்த் சிவாஜி படத்தில் தெரிவித்து இருப்பார். இந்த வசனத்திற்கு ஏற்ப தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 62வயதான வேலம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயுரம் தாலூகாவிற்குட்பட்ட ஊராட்சி அயன்ராசாபட்டி. இந்த ஊராட்சியில் உள்ள கைலாசபுரம் கிராமத்தினை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி வேலம்மாள், இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 2 பெண்கள். விவசாய கூலி வேலை செய்து வந்த கருப்பையா கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வேலம்மாள் தான் கூலி வேலை பார்த்து குடும்பத்தினை காப்பாற்றி வந்தார். அவருடைய 5 பிள்ளைகளுக்கும் திருமணமாகி அனைவரும் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் யாரும் வேலம்மாளை கவனிப்பதில்லை என்பதால் , அவர் மட்டும் தான் தனது வீட்டில்  தனியாக வசித்து வருகிறார்.

கணவனும் இல்லை, பிள்ளைகளும் கவனிக்கவில்லை என்பதால் மிகுந்த வறுமையுடன் 100 நாள் வேலைக்கு செல்வது, விவசாய கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தினை கொண்டு தனது வாழ்வினை நடத்தி வருகிறார் 62வயதான மூதாட்டி. உடல்நிலை வேறு பாதிப்பு இருப்பதால் பல நாள்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் ரேஷனில் கிடைக்கும் அரிசியை வாங்கி கஞ்சி காய்ச்சி வடித்து தனது வாழ்நாள்களை கழித்து வருகிறார்.

Also Read: அண்ணன்.. 77வயது முதியவர்.. ப்ளஸ் 1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிர்ச்சி தகவல்

தனது வறுமை மற்றும் வயோதிகத்தினை கருத்தில் கொண்டு அரசு வழங்கும் மாத உதவி தொகை கேட்டு பலமுறை மனு அளித்தும், அந்த மனுக்கள் கிணற்றில் போட்ட கல் போல இருப்பதால் உதவி தொகையும் கிடைக்கவில்லை, வயதான காலத்திலும் தனது உடல் நிலையை பார்க்காமல் உழைத்து வாழும் வேலம்மாளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழை வடிவில் மற்றொரு துயரத்தினை அடைந்துள்ளார்.

மூதாட்டி வேலம்மாளின் வீடு


கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் அவரது ஓட்டு வீட்டின் பல பகுதிகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெயர்ந்தது மட்டுமின்றி,மேற்கூரையும் சேதமடைந்து சுற்றுசுவர்களும் விரிசல் அடைந்தன. உணவிற்கே அல்லப்படும் வேலம்மாளினால் வீட்டினை சீரமைக்க முடியாத நிலை. வேறு வழியில்லமால் தார் பாய் வாங்கி அதனை வீட்டு முழுவதும் கட்டி வசித்து வருகிறார். அதிக மழை பெய்ய தொடங்கினால் தார்பாயையும் மீறி வீட்டிற்கு தண்ணீர் புகுந்து விடுவதால் மழைநீர் தேங்கிய சேற்றில் தான் மூதாட்டி வேலம்மாள் வசித்து வருகிறார்.

Also Read:  500 ரூபாய் ஃபைன் இங்க கட்டுனா 300தான் - ஊரடங்கில் வசூல் வேட்டை நடத்திய போலி போலீஸ்

வீடு இடிந்து சேதமடைந்த போது மின் இணைப்பும் துண்டிகப்பட்டதால், மின்வசதி இல்லமால் இரவில் மெழுகுவர்த்தி, மண்ணெணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் இருந்து வருகிறார். சுற்றுச்சுவர்களும் சேதமடைந்து ஆங்காங்கே துளைகள் காணப்படுவதால் அந்த துளைகள் வழியாக பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் வேம்மாள் வீட்டிற்கு ஹாயாக வந்து செல்லும் நிலை உள்ளது. இனி அடுத்து மழை பெய்தால் இருக்கக்கூடிய சுற்றுசுவர்களும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை தான் உள்ளது.

வேலம்மாள்


கணவனும் இல்லை, பிள்ளைகள் ஆதரவும் இல்லமால் இடிந்து போன வீட்டில் தார் பாய் அமைத்து வாழ்ந்து வரும் வேலம்மாளின் நிலைமையை கருதி அவருக்கு பசுமை வீடு கட்டி தருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்படுது மட்டுமின்றி, மாத உதவி தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மூதாட்டி வேலம்மாளின் கோரிக்கையாக உள்ளது.

“கணவன் இறந்த பிறகு தனியாக தான் வசித்து வருகிறேன். யாரும் கவனிப்பதில்லை,  சொந்தம் என்று இருந்த வீடும் மழைக்கு இடிந்து விட்டது. தார்பாய் வாங்கி இடிந்த இடங்களை மூடி வசித்து வருகிறேன், தார்பாய் வாங்கிய கடனை கொடுக்க முடியவில்ல., மின்சாரம் இல்லை, இரவில் மெழுகுவார்த்தி, மண்ணெணெய் விளக்குதான் துணை. தார் பாய் போர்த்தி இருந்தாலும் அதிக மழை பெய்தால் தண்ணீர் வீட்டிற்குள் வந்துவிடும். அவ்வாறு வரும் பொழுது வீட்டில் இருக்கும் பாத்திரங்களை பிடித்தவாறு மழைக்குள் இருந்து வருகிறேன். மீதமுள்ள சுவர்கள்  இடிந்து விழும் நிலையில் இருப்பதால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.’

வேலம்மாள் வசித்து வரும் வீடு


Also Read: நான் உதயநிதியின் பி.ஏ.. என்று கூறி இளம்பெண்ணிடம் லட்சங்களை சுருட்டிய மோசடி பேர்வழி கைது

விஷபூச்சிகளும் வீட்டிற்குள் வந்து விடுகின்றன. உதவி தொகை கேட்டு விண்ணப்பம் செய்து கிடைக்கவில்லை. 100 நாள் வேலையும் சரியாக கிடைக்கவில்லை ரேஷன் அரிசியில் தான் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது. அரசு தனக்கு பசுமை வீடு கட்டி தர நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி மாத உதவித் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்கிறார் கண்ணீருடன் வேலம்மாள்.

கணவனும் இல்லை, பிள்ளைகள் ஆதரவும் இல்லாமல் தனது உழைப்பினை நம்பி மட்டு வாழ்ந்து வரும் 62வயதான மூதாட்டிக்கு மாவட்ட நிர்வாகம் பசுமைவீடு கட்டி தருவது மட்டுமின்றி, மாத உதவி தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை. மாவட்ட ஆட்சியர் செய்து தருவார் என்ற நம்பிக்கையுடன் தினந்தோறும் இடிந்து போன வீட்டுடன் வாழ்ந்து வருகிறார் மூதாட்டி வேலம்மாள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Kovilpatti, Thoothukudi, Woman

அடுத்த செய்தி