முகப்பு /செய்தி /தமிழ்நாடு / லிப்ட் கொடுத்தது குற்றமா? - போதை ஆசாமியிடம் சிக்கிக்கொண்ட புரோட்டா மாஸ்டர்

லிப்ட் கொடுத்தது குற்றமா? - போதை ஆசாமியிடம் சிக்கிக்கொண்ட புரோட்டா மாஸ்டர்

கைதான ரமேஷ்குமார்

கைதான ரமேஷ்குமார்

தூத்துக்குடியில் லிப்ட் கொடுத்த நபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தூத்துக்குடியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் ஒருவர் போதை ஆசாமிக்கு இரவில் பாவம் பார்த்து தனது டூவிலரில் லிப்ட் கொடுத்துள்ளார். ஆனால் லிப்ட் கேட்ட ஆசாமி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம், உணவு ஆகியற்றை பறிமுதல் செய்ததது மட்டுமின்றி டூவிலரை போதை ஆசாமி பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன்செங்கல்படை கிராமத்தினை சேர்ந்தவர் முருகன் (வயது55). இவர் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டாராக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையில் வழக்கம் போல வேலையை முடித்து விட்டு தனது டூவிலரில் ஊருக்கு திரும்பியுள்ளார். எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டு இருந்த போது கே.குமரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ்குமார்(வயது 35) என்பவர், வழி மறித்து லிப்ட் கேட்டுள்ளார்.

சுப்பிரமணியபுரம் வரை செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். இரவு நேரம் என்பதால் இரக்கப்பட்டு முருகனும் லிப்ட் கொடுத்துள்ளார். சுப்பிரமணியபுரம் வந்ததும் ரமேஷ்குமார் இறங்கமால் தான் மது அருந்தியுள்ளதாகவும், தன்னால் ஊருக்கு நடந்து போக முடியாது, இந்த நேரத்தில் பஸ்சும் கிடையாது, சகோதரனாக நினைத்து தன்னை கே.குமரெட்டியபுரம் விலக்கு வரை மட்டும் விட்டு செல்லுமாறு முருகனிடம் காலில் விழாத குறையாக பவ்வியமாக கொஞ்சி உள்ளார்.

Also Read:  நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி.. விபரீத ஆசையால் வில்லங்கத்தில் சிக்கிய கும்பல்

இரவு நேரம் வேற , இந்த சமயத்தில் பஸ் கிடையாது என்பதால் இரக்கப்பட்டு, முருகனும் டூவிலரில் அழைத்துச் சென்றுள்ளார். கே.குமரெட்டியபுரம் விலக்கு அருகே சென்றதும் அது =வரை பவ்வியமாக பேசிவந்த ரமேஷ்குமார் குரல் அதிகார தோரணைக்கு மாறியது. விலக்கு வந்ததும் இறங்கமால் ஊருக்குள் கொண்டு போய் விடு என்று முருகனிடம் ரமேஷ்குமார் அதட்டி கணத்த குரலில் சொல்லியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் அதெல்லாம் முடியாது, நான் ஊருக்கு போக வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் ரமேஷ்குமார் டூவிலரில் இருந்து இறங்காமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, முருகன் கழுத்தின் பின் பகுதியில் வைத்து மிரட்ட தொடங்கியுள்ளார்.

மேலும் முருகன் பையில் வைத்திருந்த அன்றை சம்பள பணம் ரூ350 மற்றும் அவர் வீட்டில் சாப்பிடுவதற்காக கொண்டு சென்ற சாப்பாடு பார்சல் ஆகியவற்றை பறித்த போதை ஆசாமி ரமேஷ்குமார் அதோடு விடமால் டூவிலரை கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விடு என்று முருகனை பார்த்து மிரட்டியதது மட்டுமின்றி டூவிலர் சாவியையும் பிடுங்கி வைத்துள்ளார். பாவம் பார்க்க போய் பணத்தினை, உணவினை இழந்து விட்டோம், இனி டூவிலரையும் இழந்து விடக்கூடாது என்று நினைத்த முருகன், போதை ஆசாமி ரமேஷ்குமாருடன் போராட ஆரம்பித்தார், போதையில் இருந்த ரமேஷ்குமாரை தள்ளிவிட்டு, அவன் கையில் வைத்திருந்த சாவியை பிடுங்கி டூவிலரை ஸ்டார்ட் பண்ணி அங்கிருந்து முருகன் தப்பிவந்துள்ளார்.

Also Read:  ஆந்திராவில் நடந்த தடியடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் காயம்!

இரவு ஊருக்கு சென்று வீட்டில் நடத்தவற்றை கூறியது மட்டுமின்றி மறுநாள் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து போதை ஆசாமி ரமேஷ்குமாரை கைது செய்தனர். ரமேஷ்குமார் மீது ஏற்கனவே வழிப்பறி மற்றும் அடிதடி என 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். பாவம் பார்த்து லிப்ட் கொடுத்த காரணத்தினால் போதை ஆசாமியின் அலப்பறையினால் புரோட்டா மாஸ்டர் பட்ட இன்னல்கள், இனி யாருக்கும் லிப்ட் கொடுக்க முடியாத நிலை உருவாக்கி உள்ளது

First published:

Tags: Arrest, Cheating, Cheating case, Crime News, Parotta, Police