Sterlite oxygen | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியது..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் ஆலை தொடங்கியுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதி வேகமாக பரவி வருவதால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் நிலையில் தமிழகம் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழக அரசும், உச்சநீதிமன்றமும் அண்மையில் அனுமதி வழங்கின. இதனையடுத்து முதல்கட்டமாக 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நெல்லை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. பின்னர் இயந்திரகோளாறு ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த 14-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    தற்போது 6 நாட்களுக்கு பிறகு இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் ஆலை தொடங்கியுள்ளது. மீண்டும் உற்பத்திப் பணிகள் தொடங்கிவிட்டதாக ஸ்டெலைட் நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களின்படி விரைவில் ஆக்சிஜன் விநியோகம் தொடங்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் படிக்க... ஆக்சிஜன், தடுப்பூசி தயாரிப்பு- தமிழகம் களமிறங்குவது கட்டாயமா?



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: