Home /News /tamil-nadu /

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: தூத்துக்குடியில் 800 டன் கருவாடு தேக்கம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: தூத்துக்குடியில் 800 டன் கருவாடு தேக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 800 டன் அளவுக்கு கருவாடு தேக்கமடைந்துள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் மற்றும் அதனை சார்ந்துள்ள மீன் உணவு உற்பத்தி, கருவாடு தயாரிக்கும் தொழில்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதில், கருவாடு தயாரிப்பது இங்கு தனி தொழிலாக செய்யப்படுகிறது. மேலும், தூத்துக்குடி கடலில் பிடிக்கப்படும் சீலா, நெத்திலி, திருக்கை, மாசி உள்ளிட்ட மீன் வகைகளின் கருவாடுகள் இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    இதில், இலங்கைக்கு மட்டும் மாதம் 1,000 டன் ஏற்றுமதியான நிலையில், 2020ஆம் ஆண்டு கருவாடு இறக்குமதிக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்து. பின்னர் நீக்கியதால் ஏற்றுமதி தொழில் சீராக நடந்து வந்ததது. இந்த நிலையில், தற்போது அங்கு கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் இருந்து கருவாடு ஏற்றுமதி செய்யப்படுவது பாதியாக குறைந்துள்ளது.

    மேலும், பணம் வருமா என்ற ஐயத்தில் உள்ளதால், சிலர் மட்டுமே தற்போது குறைந்த அளவு கருவாடுகளையே அனுப்புவதாகவும். இதனால், 800 டன் அளவுக்கு கருவாடு தேக்கமடைந்து உள்ளதாகவும் ஏற்றுமதியாளர் ஜான்சன் தெரிவித்தார்.

    இதனிடையே, 2011 முதல் 2021ஆம் ஆண்டுவரை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு எவ்வளவு டன் கடல்சார் உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பதை இங்கே காணலாம்.

    2011ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரை 34,532 டன் கடல்சார் உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 2012 - 13ஆம் ஆண்டில் 32,989 டன், 2013 - 14ஆம் ஆண்டில் 39,547 டன், 2014 - 15ஆம் ஆண்டில் 42,203 டன் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    இலங்கையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்கள்- மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    2015 - 16ஆம் ஆண்டில் 40,591 டன், 2016 - 17ஆம் ஆண்டு 42,026 டன், 2017 - 18ஆம் ஆண்டு 51,684 டன், 2018 - 19ஆம் ஆண்டு 55,251 டன்னும், 2019 - 20-ல் 57,159 டன், 2020 - 21-ல் 47,299 டன் கடல் சார் உணவு வகைகளும் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
    Published by:Karthick S
    First published:

    Tags: Thoothukudi

    அடுத்த செய்தி