திமிங்கலம் உமிழ்ந்த மெழுகு கள்ளச்சந்தையில் விற்பனை.. ரூ 2 கோடி மதிப்புள்ள அம்பர்கீரிஸ்-வுடன் 6 பேர் கைது..

Youtube Video

தூத்துக்குடி மாவட்டத்தில் திமிங்கலம் உமிழக்கூடிய அபூர்வமான அம்பர்கீரிஸ் என்னும் ஒருவகை மெழுக்கை கள்ளசந்தையில் விற்பனைசெய்ய முயன்ற கும்பல் சிக்கியுள்ளது.2 கோடு மதிப்புள்ள பொருளை கள்ள சந்தையில் விற்பனை செய்ய முயன்ற கும்பல் சிக்கியது எப்படி?

  • Share this:
    திமிங்கலங்கள் தங்கள் செரிமான மண்டலத்தில் இருந்து அபூர்வமாக சில திரவங்களை வெளியேற்றும். அந்த திரவங்கள் கடலின் மேல் பகுதியில் மெழுகு போன்று கிடைக்கும் ,அந்த அபூர்வ மெழுகு மருத்துவ பொருளாகவும் ,விலை உயர்ந்த வாசணை பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றது .அதனை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற கும்பல் ஒன்று சிக்கியுள்ளது . கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?

    தஞ்சை மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் வழியாக ஒருவித விலையுயர்ந்த பொருள் ஒன்று கடத்தி வரப்படுவதாக திருசந்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு காரை நிறுத்திய போலீசார் வாகனத்தை சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வாகனத்தில் ரகசியமாக மெழுகு போன்ற ஒரு பொருளை அவரகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. சிக்கிய பொருள் திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய அம்பர்கீரிஸ் என்பது தெரியவந்தது. இது வாசனை திரவியம் தயாரிப்பதற்கும் ,மருந்து பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும் ஒருவகை பொருளாகும்.



    சிக்கியவர்கள் இளங்கோவன் ,ராம்குமார்,முஹமது அஸ்லம்,ராஜா முஹமது,ஜான்பிரிட்டோ மற்றும் வெங்கடேஷ் என்று தெரியவந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தோனோசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் கோடி கணக்கில் கள்ளசந்தையில் இது விற்கப்படுவதும், தூத்துக்குடி கடல் வழியாக இலங்கை மற்றும் பிற நாடுகளுக்கு இவர்கள் இதை கள்ளசந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூன் 24)

    கடத்தப்பட்ட அம்பர்கீரிஸ்சின் சர்வதேச மதிப்பு ரூ 2கோடி இருக்கும் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஆம்பர் கீரிஸ் மற்றும் 6 பேர், அவர்கள் வந்த காரையும் திருச்செந்தூர் போலீசார் திருச்செந்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைந்தனர்.
    Published by:Vaijayanthi S
    First published: